districts

திருச்சி முக்கிய செய்திகள்

மக்கள் குறைகேட்பு கூட்டம்

அரியலூர், டிச.4- அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைகேட்பு கூட்டம் திங் கள்கிழமை நடைபெற் றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலு வலர் ம.ச.கலைவாணி தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து பெற்ற 365 கோரிக்கை மனுக்கள் மீது நடவ டிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர் களுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் தனித் துணை  ஆட்சியர் இளங்கோ வன், மாவட்ட ஆட்சிய ரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) பவானி, மாவட்ட வழங் கல் அலுவலர் ராம லிங்கம் மற்றும் அனைத்து  துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

அறந்தாங்கி, டிச.4 - உலக மாற்றுத்திற னாளிகள் தினத்தை முன்னிட்டு புதுக் கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் புற நோயாளிகள் என நூற்றுக்கும் மேற் பட்டோருக்கு அரிசி, பெட்ஷீட், தலையணை, போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட் கள் நலத்திட்ட உதவி களாக வழங்கப்பட்டன.  இவற்றை சமூக ஆர் வலர் தென்றல் நீல கண்டன் வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவர் பிரவீனா, வழக்கறிஞர் அலாவுதீன்,  மெடிக்கல் பழனியப்பன், ராமன் திருவாக்குடி ஊராட்சி மன்ற தலைவர் கலா கருப்பையா உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஔவையார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

கரூர், டிச.4 - கரூர் மாவட்டத்தில் பெண்கள் முன்னேற்றத் திற்கு சிறந்த சேவை புரிந்த மகளிருக்கு, 2024 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தின விழாவின் போது, முதலமைச்சரால் ஒளவையார் விருது வழங்கப்பட உள்ளது. இவ்விருது சமூக  சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக் கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறை களில் மிக சிறந்து விளங் கும் மகளிருக்கு வழங்கப் படுகிறது. விருது பெற விரும்புவோர் https://awards.tn.gov.in என்ற  இணையதளம் வாயி லாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப் பிப்பதற்கான கடைசி நாள் 8.12.2023 மாலை 5.45மணி.  இவ்விருது தொடர் பாக தேவைப்படும் விவ ரங்களை கரூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செயல்பட்டு வரும், மாவட்ட சமூக நல அலுவ லகத்தை வேலை நாட்க ளில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரையும், மாவட்ட சமூக நல அலுவலக தொலை பேசி எண்- 04324-255009-ஐ  தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர்  மீ.தங்கவேல் தெரிவித்து உள்ளார்.

மிரட்டலை துணிச்சலோடு எதிர்கொள்வோம்! அமைச்சர் எஸ்.ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை, டிச.4 - எந்த மிரட்டலுக்கும் அஞ்சாமல், துணிச்சலோடு எதிர்கொள்வோம் என்றார் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி.  புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டியில், “அமலாக்கத் துறை அலுவலர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் எடுத்த நடவடிக்கை குறித்து கேட்கிறீர்கள். யார் தவறு செய்தாலும், அதுகுறித்து ஆதாரப்பூர்வமாக தகவல் கிடைத்தால், அவர்கள் எந்த உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது நேர்மையாக துணிச்சலான நடவடிக்கை எடுக்கப்படும். எந்த மிரட்டலுக்கும் அஞ்சுவதோ, பணிவதோ திமுக இயக்கமல்ல. எல்லாவற்றையும் துணிச்சலுடன் எதிர்கொள்வோம். அமலாக்கத்துறை அலுவலகம் சோதனை செய்யப்பட்ட விவகாரத்தில், அவர்கள் எந்தத் தவறும் செய்யாவிட்டால், ஏன் மத்திய காவல் படையினரை வைத்து அறைகளைப் பாதுகாக்க வேண்டும். மடியில் கனமில்லையென்றால் வழியில் என்ன பயம். பாஜகவுக்கு அமலாக்கத் துறைதான் கூட்டணிக் கட்சி என்பதைத் தொடர்ந்து தெரிவித்து வருகிறோம். 4 மாநிலத் தேர்தல் முடிவுகள் எப்படியிருந்தாலும், வரும் மக்களவைத் தேர்தலை இந்தியா கூட்டணி உற்சாகத்துடன் எதிர்கொள்ளும்” என்றார்.

மிக் ஜம் புயல்  புதுகையில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் தயார்

அமைச்சர் பேட்டி பொன்னமராவதி, டிச.4 - மிக் ஜாம் புயலை எதிர்கொள்வற்கு புதுக் கோட்டை மாவட்டத்தில் அனைத்து நட வடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறினார்.  பொன்னமராவதி அருகே உள்ள கண்டி யாநத்தம் பூதன்வளவு, பட்டவன்கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற பின்னர் தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் மிக் ஜாம்  புயலை எதிர்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட ஆட்சியர் தலை மையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக கடற்கரை பகுதிகளான ஆவுடை யார்கோவில், மணமேல்குடி ஆகிய பகுதி களில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நிவா ரணம் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத் தலைநகரி லும் அலுவலகத்தினர், அங்கேயே தங்கி யிருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு தாலுகா அலுவல கத்திலும் வட்டாட்சியர் அங்கேயே தங்கி,  அந்தப் பகுதிகளில் பணிகளை மேற்கொள்ள  அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மாவட்ட  நிர்வாகத்தின் மூலமாக கட்டுப்பாட்டு அறை  தொடங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் எந்த பகுதியில் பாதிப்பு ஏற்பட்டாலும், அதை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை புதுக் கோட்டை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது” என்றார்.

முதலமைச்சர் திறனாய்வு தேர்வு பேராவூரணி அரசுப் பள்ளி மாணவிகள் 2 பேர் வெற்றி

தஞ்சாவூர், டிச.4 -  அரசுப் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாண வர்களின் திறனை கண்டறிவதற்கும், அவர்களை ஊக்கப் படுத்தும் வகையிலும், தமிழ்நாடு முதலமைச்சரின் திற னாய்வுத் தேர்வு ஆண்டு தோறும் நடைபெற்று வரு கிறது.  இந்தாண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற திற னாய்வு தேர்வில் 1,27,673 மாணவ-மாணவியர்கள் தேர்வு  எழுதினர். அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறும்  500 மாணவர்கள், 500 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை மாதம் ரூ.1000  வீதம் ஒரு கல்வியாண்டில் 10 மாதங்களுக்கு உதவித் தொகையாக ரூ.10,000 வழங்கப்படும். லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதியதில், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கள் ரமா, பிரியதர்ஷினி ஆகிய இருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவிகளை பள்ளி ஆசிரி யர்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர். 

ஆவேரி ஏரியை தூய்மைப்படுத்துக! விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

ஜெயங்கொண்டம், டிச.4- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் அரியலூர் மாவட்ட  ஜெயங்கொண்டம் ஒன்றியக் குழு கூட்டம், ஒன்றியத் தலைவர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.  மாவட்டச் செயலாளர் மணிவேல், ஒன்றியச் செய லாளர் தியாகராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக ஒன்றிய பொருளாளர் தனவேல் வரவேற்றார்.  கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.    ஒன்றிய மோடி அரசு மின்சாரத் துறையை தனியா ருக்கு தாரைவார்க்கும் வகையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத் துவதை தடுக்கும் வகையில், டிச.12 அன்று கோட்டப்  பொறியாளரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்து வது. ஜெயங்கொண்டம் நகரத்தில் உள்ள ஆவேரி ஏரியை  ஆழப்படுத்தி தூய்மைப்படுத்த வேண்டும். ஜீப்ளி சாலை யில் உள்ள பதுவனேரியில் சாக்கடை கலப்பதை தடுத்து  நிறுத்த வேண்டும். கோடாப்பிள்ளை ஏரியை சுத்தப் படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாக்க வேண்டும்  என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

சத்து மாத்திரைகளை அதிகமாக   சாப்பிட்ட மாணவர் உயிரிழப்பு

திருச்சிராப்பள்ளி, டிச.4 - திருச்சி திருவளர்ச்சிபட்டி செம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் காமராஜ். இவரது மகன் வில்பட் (14)  திருச்சி புத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்ப தாம் வகுப்பு படித்து வந்தார். இவரிடம் பள்ளியில் அரசாங்கம் கொடுக்கும் சத்து மாத்திரையை ஆசிரியர்கள் கொடுத்துள்ளனர். ஒரு நாளைக்கு ஒன்று என்ற கணக்கில் 30 மாத்திரைகள் கொடுக் கப்பட்டது. ஆனால் மாணவரோ கடந்த ஒன்றாம் தேதி  பள்ளியில் இருக்கும்போது பத்து மாத்திரையை சாப்பிட்ட தாக கூறப்படுகிறது. பின்னர் வீடு திரும்பிய அந்த மாணவனுக்கு, திடீரென  உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே பெற்றோர் மகனை  மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி திங்க ளன்று மாணவர் வில்பட் உயிரிழந்தார். இது தொடர்பாக  உறையூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து  நிலைய கட்டுமானப் பணிகள் தீவிரம் மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆய்வு

திருச்சிராப்பள்ளி, டிச.4 - ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணி களை திருச்சி மாநகராட்சி மேயர் ஆய்வு செய்தார். திருச்சி மாநகராட்சி சார்பில் பஞ்சப்பூரில் 40.60 ஏக்கரில்  பிரம்மாண்ட ஒருங்கிணைந்த பேருந்து முனையம், பல்வகைப் பண்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம்  ரூ.243.78 கோடியிலும், கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் உள்கட்ட மைப்பு வசதிகள் மேற்கொள்ளும் பணி ரூ.106.20 கோடி யிலும் என மொத்தம் ரூ.349.98 கோடி செலவில் பஞ்சப்பூர்  பெருந்திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகள் நடை பெற்று வருகின்றன. ஒருங்கிணைந்த பேருந்து முனையப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர  திட்டமிட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.  இந்நிலையில், பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து  நிலைய கட்டுமானப் பணிகளை மேயர்  அன்பழகன் திங்க ளன்று நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது நகரப் பொறியாளர் பி.சிவபாதம், செயற்பொறியாளர் கே.எஸ். பாலசுப்பிரமணியன், மண்டலத் தலைவர் துர்காதேவி, மாமன்ற உறுப்பினர் சுபா, உதவி பொறியாளர் வேல்முரு கன் ஆகியோர் உடனிருந்தனர்.

ஸ்ரீரங்கத்தில் 4,900 வீடுகளுக்கு குப்பைத் தொட்டிகள் வழங்கல்

திருச்சிராப்பள்ளி, டிச.4 - திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. 65 வார்டுகளிலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து  மாநகராட்சி சார்பில் வாங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில் ஸ்ரீரங்கம் மண்டலம் - 1க்குட்பட்ட 4-வது  வார்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 4900 வீடுகளுக்கு மண்டல குழு தலைவர் ஆண்டாள் ராம்குமார்,  ஸ்ரீரங்கம் பகுதி திமுக செயலாளர் ராம்குமார் ஏற்பாட்டில் இரு  வண்ண குப்பை தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மாநக ராட்சியில் திங்களன்று நடந்தது. மேயர் அன்பழகன், ஆணை யர் வைத்தியநாதன் ஆகியோர் பொதுமக்களுக்கு இரு வண்ண குப்பைத் தொட்டிகளை வழங்கினர்.