கரூர், ஜன.6 - குளித்தலை அரசு மருத்துவ மனையை மீண்டும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் குளித்தலை பகுதி மக்கள் வரவேற்றுள் ளனர். கரூர் மாவட்டம் கரூரில் செயல்பட்டு வந்த அரசு மாவட்ட தலைமை மருத்து வமனை, தமிழக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.
கரூருக்கு அடுத்தபடி யாக இரண்டாவது பெரிய நகரமான குளித்தலையில் உள்ள அரசு மருத்து வமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த கடந்த அதிமுக அரசு நடவடிக்கை எடுத்த நிலையில், குளித்தலை அரசு மருத்துவமனையில் அனைத்து பிரிவு களுக்கான புதிய கட்டிடங்கள் கட்டப் பட்டன. அன்றைய அதிமுக அரசு, குளித் தலை அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனை யாக அறிவித்தது. ஆனால் அரசாணை வெளியிடவில்லை.
தற்போதும் இணைய தளத்தில், குளித்தலை அரசு மருத்துவ மனைதான் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக உள்ளது. 2021 இல் திமுக ஆட்சிக்குப் பிறகு, குளித்தலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை செயல் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும், குளித்தலை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுநல அமைப்புகள், அனைத்து அரசியல் கட்சிகள் சார்பிலும் தமிழக முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர், குளித் தலை சட்டமன்ற உறுப்பினர் இரா.மாணிக்கம் ஆகியோரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பிறகு 25.10.2021 இல் ‘குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை அரசு மருத்துவ மனையாக அறிவித்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
அதன் பிற கும் குளித்தலை அரசு மருத்துவ மனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், அரசு வெளியிட்ட அரசாணைப்படி குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி செயல்படுத்த வேண்டும் என வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் அனைத்துக் கட்சிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அனைத்து அரசு அதி காரிகளுக்கும் பலமுறை மனுக்கள் கொடுக்கப்பட்டன. இதுகுறித்து தீக்க திர் நாளிதழில் பலமுறை செய்திகள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், தமிழ்நாடு அரசும் சுகாதாரத் துறையும் குளித்தலை அரசு மருத்துவமனையை மீண்டும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக அறிவித்து, அரசாணை வெளியிட்டு உள்ளது. அரசின் இந்த அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றியக்குழு, குளித்தலை பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அனைத்து கட்சியினர் வரவேற் றுள்ளனர். இதன்படி ‘அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, குளித்தலை’ என்ற பெயர் பலகையும் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் வெள்ளிக் கிழமை மருத்துவமனை நுழைவாயி லில் வைக்கப்பட்டது.
இந்த பெயர் பலகையை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் பி.ராஜூ, குளித்தலை ஒன்றியச் செய லாளர் இரா.முத்துச்செல்வன் உள்ளிட் டோர் மகிழ்ச்சியுடன் பார்வையிட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்தால், குளித்தலை அரசு மருத்துவமனையை, கரூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவ மனையாக மீண்டும் அறிவித்து, பெயர் பலகை வைத்துள்ளதன் மூலம், குளித் தலை நகரத்தைச் சுற்றியுள்ள மக்க ளின் உள்ளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நீங்கா இடத்தைப் பிடித்துள் ளது குறிப்பிடத்தக்கது.