districts

விவசாயிகளின் பணத்தை மோசடி செய்த விஏஓ கைது

மயிலாடுதுறை, டிச. 3 - விவசாயிகளை ஏமாற்றி போலி ஆவணங் களை வைத்து பயிர் காப்பீட்டு தொகையில் முறைகேடு செய்த கிராம நிர்வாக அலுவலர்  திருமலைசங்கு பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார். மயிலாடுதுறை வட்டத்திற்குட்பட்ட அகர கீரங்குடி ஊராட்சிக்குட்பட்ட முட்டம் கிராமத் தில் கடந்த 2020-ஆம் ஆண்டு சுமார் 450  ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் சம்பா  சாகுபடி செய்திருந்தனர். அந்த பயிர்க ளுக்கு, சிட்டா, அடங்கலுடன் கிராம நிர்வாக அலுவலர் திருமலைசங்கு என்பவரிடம் சமர்ப்பித்து பயிர்க் காப்பீட்டினையும் செய்தி ருந்தனர். அந்த பருவத்தில் பெய்த கனமழை யின் காரணமாக சம்பா பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு 68  சதவீத தொகையாக ரூ.22,000-த்தை காப்பீட்டு  நிறுவனம் அறிவித்தது. இந்த காப்பீட்டுத் தொகையானது 4-இல்  ஒரு பங்கு விவசாயிகளுக்கு வந்து சேர வில்லை. இதையடுத்து, இழப்பீட்டுத் தொகை  கிடைக்காத விவசாயிகள் வேளாண்துறை அதிகாரிகளை அணுகியுள்ளனர். அவர்களி டம், உழவன் செயலியை பயன்படுத்தி காப்பீட் டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதா? என்பதை  தெரிந்து கொள்ளலாம் என அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.  இதையடுத்து, உழவன் செயலியில் பார்த்த விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சி  ஏற்பட்டது. அதில், அதே புல எண்ணில்  வேறொரு நபருக்கு தொகை செலுத்தப்பட்டி ருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த  நபர்கள் யார்,யார்?

என ஆய்வு செய்ததில்  கிராம நிர்வாக அலுவலர் திருமலைசங்குவின் மனைவி, மகள் மற்றும் உறவினர்கள் என்பது தெரியவந்தது. மேலும் சிலரது புல எண்ணுக்கான காப்பீட்டுத் தொகை கிராம நிர்வாக அலுவலர் திருமலைசங்குவின் பெயருக்கே வரவு வைக்கப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விவசாயிகளின் நிலத்தின் பெய ரில் வங்கியில் பயிர்க்கடனும் பெற்று அதற்கு  விவசாய தள்ளுபடியையும் பெற்றுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதை யடுத்து, அவரிடம் நேரில் சென்று விவசா யிகள் கேட்டபோது அவர் அலட்சியமாக பதில ளித்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட விவ சாயிகள் மார்க்சிஸ்ட் கட்சியின் மயிலாடு துறை ஒன்றியக்குழு அறிவுறுத்தலின் பேரில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் புதனன்று புகார் அளித்தனர்.  இந்நிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் உத்தரவின் பேரில், கோட்டாட்சியர் பாலாஜி ஆவணங்களை சரி பார்த்ததில், வி.ஏ.ஓ போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்தது தெரியவந்தது. இதை யடுத்து வி.ஏ.ஓ திருமலைசங்குவை பணி யிடை நீக்கம் செய்து கோட்டாட்சியர் உத்தர விட்டார்.  

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.துரை ராஜ் கூறுகையில், மாவட்ட ஆட்சியர் உடனடி யாக இப்பிரச்சனையில் தலையிட்டு முறை யாக விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.  பாதிக்கப்பட்ட விவசாயிகள் பயிர்காப்பீடு கேட்டு போராடி வரும் நேரத்தில் கிராம  நிர்வாக அலுவலரே இதுபோன்ற மோசடியில்  ஈடுபட்டு இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.  அரசையும், விவசாயிகளையும் ஏமாற்றி முறைகேடாக பெற்ற தொகையை முழுமை யாக திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை யையும் ஆட்சியர் எடுப்பார் என நம்பு கிறோம். ஓரிரு நாட்களில் விவசாயிகள் சங்கம்  சார்பில் போராட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

;