districts

img

பள்ளி மாணவர்களை குறிவைத்து போதைப் பொருள் விற்பனை எஸ்.பி.யிடம் கிராம மக்கள் புகார்

தேனி, ஜூன் 1- போடி அருகே  பள்ளி மாணவர்களை குறி  வைத்து பெட்டிக்கடையில் மது, கஞ்சா,  புகையிலை உள்ளிட்ட போதை பொருள்கள்  விற்பனை செய்யும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேனி மாவட்ட  காவல்  கண்காணிப்பாளரிடம் கிராம மக்கள் புகார் அளித்தனர்.   போடிநாயக்கனூர் அருகே உள்ள ராசிங்காபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது கரியப்பகவுண்டன்பட்டி கிராமம்.‌ சுமார் 300 குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமத்தில்  தங்கன் என்ற தங்கராஜ் நடத்தி வரும் பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக மது, கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக கூறப்படு கிறது. குறிப்பாக பள்ளி மாணவர்களை குறி  வைத்து இது போன்ற தடை செய்யப்பட்ட  போதை பொருள்கள் விற்பனை செய்வதால்  பலர் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதோடு திருமண மண்டபம், ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் செயல்படும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போடி நாயக்கனூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை  எடுக்கவில்லை என்று, வெள்ளியன்று தேனி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவல கத்தில் கரியப்ப கவுண்டன்பட்டி கிராம மக்கள் புகார் அளித்தனர். ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு எஸ்.பி. அலு வலகத்தில் புகார் அளித்தனர்.  பொது மக்களின் புகாரை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை  எடுப்பதாக கூறியதை அடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

;