திருச்சிராப்பள்ளி, அக்.31 - தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழு வின் திருச்சி மாவட்ட 4-வது மாநாடு திங்க ளன்று திருச்சியில் நடந்தது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் வின்சென்ட் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ரபீக் அஹ்மத் வேலை அறிக்கையை வாசித்தார். ஹாஜி முஸ்தப்பா கமால் துவக்க உரையாற்றினார். சமூக செயல்பாட்டாளர் ஸ்ரீதர், திருச்சி புறநகர் மாவட்டத் தலைவர் தங்கராஜ் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ள சிறு பான்மை மாணவர்களின் கல்வி உதவித் தொகை, வெளி நாடுகளில் படிப்பதற்கான வங்கி கடன், வட்டி மானியம் போன்ற பல சலுகைகளை மீண்டும் அமலாக்க வேண்டும். நீண்ட கால முஸ்லீம் சிறைவாசிகளை நன்ன டத்தையின் அடிப்படையில் விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது. எனவே இதற்கான கோப்புகளில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும். மணிப்பூரில் நடந்த கலவரங்களில் உயிர்களையும் வீடு களையும் உடமைகளையும் இழந்த மக்க ளுக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கவுரவத் தலைவராக காஜி முஸ்தபா கமால், தலைவராக வழக்கறிஞர் வின்சென்ட், செயலாளராக சார்லஸ், பொரு ளாளராக ரபீக் அஹமத் உள்பட 24 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப் பட்டது. மாநில துணைத்தலைவர் கல்யாண சுந்தரம் நிறைவுரையாற்றினார்.