பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே தியாக சமுத்திரத்தில் ஊராட்சி புள்ளபூதங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டடம் பழுதடைந்து, வகுப்பறை மேற்கூரை பெயர்ந்த நிலையில் உள்ளது. பள்ளி கட்டடத்தை உடனடியாக இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்ட அப்பகுதி மக்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.