districts

திருச்சி முக்கிய செய்திகள்

பாபநாசத்தில் 2-வது சுற்று கோமாரி தடுப்பூசி முகாம்

பாபநாசம், டிச. 10 - தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 2-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் பாபநாசம் சுற்று வட்டா ரப் பகுதிகளில் நடை பெற்றது. பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே உம்பளாப்பாடி ஊராட்சியில் உம்ப ளாப்பாடி, கருப்பூர், இளங் கார்குடி, உள்ளிட்ட பகுதி களில் 450 கால்நடைகளுக் கும், கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சியில் பட்டுக் குடி, கூடலூர், புத்தூர், குடிக்காடு, நாயக்கர் பேட்டை உள்ளிட்ட பகுதி களில் 500 கால்நடைகளுக் கும் தடுப்பூசி செலுத்தப்பட் டது. மேலும், உமையாள்பு ரம் ஊராட்சியில் அண்டக்குடி, உமையாள் புரம், உமையாள்புரம் வடக்கு உள்ளிட்ட பகுதி களில் 470 கால்நடைக ளுக்கும், இராமானுஜபுரம் ஊராட்சியில் இராமா னுஜபுரம், ராமச்சந்திரபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 300 மாடுகளுக்கும், கபிஸ்த லம் ஊராட்சியில் பவுண்டு,  திரௌபதை அம்மன் கோவில்தெரு, பங்களா தெரு, அக்கரைப் பூண்டி உள்ளிட்டப் பகுதிகளில் 620 கால்நடைகளுக்கும், உள்ளிக்கடை ஊராட் சியில் உள்ளிக்கடை சதர்மன் தெரு, கிருஷ்ணா புரம், கண்டகரையம், உள்ளிக்கடை மெயின் ரோடு, ஆடுதுறை, உள்ளிக்கடை மாதா கோ வில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட  பகுதிகளில் 320 கால்நடை களுக்கும் தடுப்பூசி செலுத்தப் பட்டது.

டிச.13 ‘மக்களை தேடி முதல்வர்’ சிறப்பு முகாம் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கலாம்

தஞ்சாவூர், டிச.10 - டிச.13 (திங்கள்கிழமை) அன்று நடைபெற  உள்ள ‘மக்களைத் தேடி முதல்வர்’ சிறப்பு  முகாமில், பொதுமக்கள் தங்கள் கோரிக்கை களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் மனுவாக அளிக்கலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஆட்சி யர் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, பொதுமக்களின் குறை களை மனுக்களாக பெற்று தீர்வு காணும் நோக்கத்தில் “மக்களை தேடி முதல்வர்” சிறப்பு முகாம் நடத்திட மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இம்முகாமில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை  பெற்று தீர்வு காண உள்ளார். அதனடிப்படை யில், தஞ்சை மாவட்டத்தில் 13.12.2021 (திங்கட் கிழமை) பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகு திக்குட்பட்ட மதுக்கூர் - பூங்கொடி திருமண மண்டபத்தில் காலை 10 மணியளவிலும், பட்டுக்கோட்டை குமரன் திருமண மண்டபத் தில் காலை 11 மணியளவிலும், அதிராம்பட்டி னம் லாவண்யா திருமண மண்டபத்தில் காலை 12 மணியளவிலும் சிறப்பு முகாம் நடை பெற உள்ளது.  இதேபோன்று பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருமகளூர் - முருகன் கோயில் திடலில் பிற்பகல் 2 மணியளவிலும், பேராவூரணி - நடேச குணசேகரன் திருமண மண்டபத்தில் மாலை 4 மணியளவிலும், வா. கொல்லைக்காடு திருமண மண்டபத்தில் மாலை 5 மணியளவிலும்  நடைபெறவுள்ளது. எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமினை,  உரிய முறையில் பயன்படுத்தி தங்களுடைய  குறைகளை துறை ரீதியாக தனித்தனி மனுக்க ளாக வழங்கிடலாம்” என தெரிவித்துள்ளார்.

கூடுதல் கட்டணம் வசூலிக்கும்  இ-சேவை மையங்களின் உரிமம் ரத்து

அரியலூர் ஆட்சியர் எச்சரிக்கை

அரியலூர், டிச. 10 - அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பல தனி யார் கணினி மையங்க ளில், பொது மக்கள் பயன் பாட்டிற்காக மட்டும் உரு வாக்கப்பட்ட இ-சேவை Citi zen Login-ல் 20 வகையான வருவாய்த்துறை சான்றி தழ்களும், 6 வகையான முதியோர் உதவித்தொகை திட்டங்களுக்கான விண்ணப் பங்களும் விண்ணப்பிக்கப் பட்டு வருகின்றன. அவ்வாறு விண்ணப்பிக் கும் சான்றிதழ்களில் எழுத் துப்பிழை, தவறான ஆவ ணங்களை இணைத்தல், இடைத்தரகர்கள் மூலம் அதிக கட்டணம் பெறுதல் போன்ற பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.  அரசு பொது இ-சேவை  மையங்களில் வரு வாய்த்துறை சான்றுகளின் விண்ணப்பம் ஒன்றிற்கு ரூ. 60, ஓய்வூதிய திட்டம் தொடர் பான விண்ணப்பம் ஒன்றிற்கு ரூ.10, சமூகநலத்துறையின் மூலம் வழங்கப்படும் திரு மண நிதியுதவித் திட்டங்கள்  மற்றும் பெண் குழந்தை  பாதுகாப்புத் திட்டங்கள் தொ டர்பான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றிற்கு ரூ.120, இணை யவழி பட்டா மாறுதல் தொடர்பான விண்ணப்பம் ஒன்றிற்கு ரூ.60 சேவைக்  கட்டணமாக அரசினால்  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தனியார் கணினி மையங்களில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக மட்டும் துவங்கப்பட்ட Citizen Login-ல் பொது மக்களிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பித்தாலோ, அரசு உரிமம் பெற்ற மையங்கள் தவிர பிற தனியார் கணினி மையங்களில்  சான்றுகள் சம்பந்தமான விளம்பரப் பல கைகள் வைத்தாலோ அபரா தம் மற்றும் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என எச்சரிக்கப்படு கிறது. மேலும் இ-சேவை மையம் நடத்துவதற்கான அரசு உரிமம் பெற்றுள்ள தனி யார் கணினி மையங்களில் மேலே குறிப்பிட்ட சேவைக் கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்வது தெரிய வந்தால், அம்மையங்களின் பொது இ-சேவை மைய உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும். பொதுமக்கள் இடைத்தர கர்களைத் தவிர்த்து, அரு கில் உள்ள வட்டாட்சியர் அலு வலகங்களில் அமைந்துள்ள அரசு கேபிள் டிவி நிறுவ னத்தின் கீழ் இயங்கி வரும்  பொது இ-சேவை மையங் கள், கூட்டுறவு சங்க வங்கி களில் அமைந்துள்ள பொது இ-சேவை மையங்கள், கிராமப்புறங்களில் மகளிர் திட்ட அலுவலகத்தின் கீழ் கிராம வறுமை ஒழிப்பு கட்டி டங்களில் இயங்கி வரும்  பொது இ-சேவை மையங்கள்  மற்றும் அரசு உரிமம் பெற்ற  தனியார் கணினி மையங் களை அணுகிடுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். மேலும் சான்றிதழ்கள் விண்ணப்பிக்க அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட  அதிக வசூல் செய்வது தொ டர்பான புகார்களை tne sevaihelpdesk@tn.gov.in  என்ற மின்னஞ்சல் முகவரி யில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

;