districts

திருச்சி முக்கிய செய்திகள்

சிறுவர்களை கொத்தடிமைகளாக நடத்தியவர் கைது

தஞ்சாவூர், டிச. 16 -  பெற்றோரிடம் பணம்  கொடுத்து விட்டு 4 சிறு வர்களை ஆடு மேய்க்கும்  தொழிலில் கொத்தடிமை களாக பயன்படுத்தியவரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் வல்லம்புதூர் கிராமம் செம் பூண்டி பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மனைவி பாப்பாத்தி. இவர்களின் மகன்கள் வெற்றிவேல்(9), வேலாயுதம்(8), சக்தி வேல்(7), சுந்தர்(6). சுந்தர் ராஜ் விறகு வெட்டி கரி மூட்டம் போடும் தொழில் செய்து வந்தார். கடந்த 2  ஆண்டுகளுக்கு முன்பு பாப நாசம் அருகே களஞ்சேரி கிரா மத்தில் கரிமூட்டம் போட்டி ருந்தார். அப்போது அங்கு வந்த  இராமநாதபுரம் மாவட் டத்தை சேர்ந்த கோவிந்த ராஜ்(49) என்பவர் சுந்தர்ராஜி டம், அவரது மகன்களை ஆடு  மேய்க்கும் பணிக்கு அழைத்து செல்வதாகவும், அதற்கு கூலியாக ஆண்டு தோறும் பணம் கொடுப்பதாக வும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருடன்  தனது 4 மகன்களையும் சுந்தர்ராஜ் அனுப்பி வைத் துள்ளார். இதையடுத்து சூரக்கோட்டை பரிசுத்தம் நகர் பகுதியில் ஆடு மேய்க்கும் தொழிலில் இந்த 4  சிறுவர்களையும் ஈடுபடுத்தி கொத்தடிமைகளாக கோ விந்தராஜ் வைத்திருந்து உள்ளார்.  இதுகுறித்து சைல்டு லைன் அமைப்புக்கு புகார்  வந்ததையடுத்து நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு கொத்தடிமைகளாக இருந்த  சிறுவர்களை மீட்க வருவாய்  கோட்ட அலுவலர் ரஞ்சித்  நடவடிக்கை மேற்கொண் டார். இதையடுத்து மேற் கண்ட 4 சிறுவர்களும் கொத்த டிமை முறையில் இருந்து மீட்கப்பட்டனர். இதுகுறித்து சூரக் ்கோட்டை கிராம நிர்வாக அலு வலர் சங்கீதா, தஞ்சை தாலுகா காவல் நிலையத் தில் புகார் செய்தார். அதன் பேரில், காவல்துறை ஆய்வா ளர் ஜெகதீஸ்வரன் வழக்குப் பதிந்து சிறுவர்களை கொத் தடிமைகளாக பயன்படுத்தி வேலை வாங்கிய கோவிந்த ராஜை கைது செய்தார்.

கும்பகோணத்தில் ஓய்வூதியர் தின விழா

கும்பகோணம், டிச.16 - தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம்  கும்பகோணம் வட்டக்கிளையின் மாதாந்திர கூட்டம் மற்றும் ஓய்வூதியர் தின விழா கும்பகோணம் கோவிந்தன்மகாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்ட தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். ஓய்வூதியர் தினத்தின் தந்தை டி.எஸ். நகரா பற்றி மாவட்டத் தலைவர் ஆர்.கலியமூர்த்தி, தொழிற்சங்க ஒருங்கி ணைப்புத் தலைவர் டி.கோவிந்தராஜன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். தஞ்சை மாவட்ட துணைத் தலைவர் பழ.அன்புமணி, மாவட்ட பொருளாளர் பூபதி, இணைச் செயலர் கலைச் செல்வி, வட்ட செயலாளர் பக்கிரிசாமி, பொருளாளர் ராம மூர்த்தி மற்றும் வட்டப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 70 வயது நிரம்பிய ஓய்வூதியர்கள் கௌர விக்கப்பட்டனர். கொரோனா காலத்தில் பெருமளவு நன்கொடை வசூலித்து உதவி, முதலிடம் பெற்ற கும்பகோ ணம் வட்ட கிளையை பாராட்டி விருது வழங்கப்பட்டது. தஞ்சையில் டிச.30 அன்று நடைபெறவுள்ள மாநில அள விலான கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிக்கும் வகை யில் பேரவை விழாவில் ஓய்வூதியர்கள் அனைவரும் பங்கெடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கல்மந்தை அடுக்குமாடி  குடியிருப்புகளை ஆய்வு செய்ய குழு

திருச்சிராப்பள்ளி, டிச.16- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின்  திருச்சி கோட்டம் மூலம் தாராநல்லூர் கல்மந்தை அடுக்கு மாடி குடியிருப்புத் திட்டப் பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடி குடியிருப்புகள் தரமற்று இருப்பதாக பொதுமக்களி டமிருந்து புகார் வந்தது. எனவே, குடியிருப்புக் கட்டுமானத்தின் தரம் குறித்து ஆய்வு  செய்து அறிக்கை அளித்திட, திருச்சி தேசிய தொழில் நுட்பக்  கழகத்தின் சிறப்பு வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப் பட்டுள்ளது.  இந்த வல்லுநர் குழுவினர், கட்டுமானத்தின் தரம் குறித்து  முழுமையாக ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரி வித்துள்ளார்.

போதைப் பொருட்கள்  விழிப்புணர்வு பேரணி

பொன்னமராவதி, டிச.16 -  பொன்னமராவதியில் கள்ளச்சாராயம், போதை பொருட் கள் மற்றும் மதுப்பழக்கம் ஆகியவற்றால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பொன்னமராவதி காந்தி சிலை முன்பு துவங்கிய பேர ணிக்கு கோட்ட கலால் அலுவலர் கண்ணா கருப்பையா, பொன்னமராவதி வட்டாட்சியர் ஜெயபாரதி தலைமை வகித்தனர். பேரணியில், கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கினர். வரு வாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம  உதவியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற பேரணி காந்தி  சிலையில் துவங்கி அண்ணா சாலை, பேருந்து நிலையம்  வழியாக சென்று காவல் நிலையம் முன்பு நிறைவடைந்தது.

;