திருவாரூர், ஜூலை 20-
குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தமிழக அரசு தண்ணீர் திறந்துள்ளது. இதை நம்பி திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதி களைச் சேர்ந்த விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தற்போது போதிய தண்ணீர் இல்லாததால் முளைத்த பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும். குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஜூலை 26-ஆம் தேதி மாவூர் கடைத்தெரு பகுதியில் சாலை மறியல் போராட் டம் நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன் திருவாரூர் ஒன்றியச் செயலாளர் என்.இடும்பை யன், இரா.கோமதி, பவுன்ராஜ், மாதவன், சுந்தரையா, சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.