districts

img

சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, மே 25-  

     திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து  மண்ணை செல்லும் சாலையில் விரிவாக்கப் பணி நடை பெற்று வருகிறது. இதனால் இச்சாலை மண்சாலையாக  அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் சாலை புகைமண்டல மாக காட்சியளிக்கிறது.

    இதனால் வாகன ஓட்டிகள் மிகவும்  சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.  எனவே, பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில்  சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வ லர்கள் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.