districts

இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி

புதுக்கோட்டை, ஜூலை 19 -

     புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே கரம்பக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. திமுக ஒன்றியச் செயலாளரான இவ ருக்கு, அதே பகுதியில் சொந்தமாக தேங்காய் மட்டையில் இருந்து நார் பிரித்தெடுக்கும் தொழிற்சாலை உள்ளது.

    இதில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 35-க்கும் மேற்  பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், செவ் வாய்க்கிழமை நள்ளிரவில் பணியில் ஈடுபட்டிருந்த போது ராஜஸ்தான்  மாநிலத்தைச் சேர்ந்த பி.பெரோஸ் கடாட்(32) என்பவர் எதிர்பாராமல் இயந்திரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பெரோஸ் கடாட் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு புதன்கிழமை அனுப்பி வைத்தனர்.