மயிலாடுதுறை, மார்ச் 25- மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடை யூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருக்கடையூர் சன்னதி தெருவில் 114 ஆண்டுகள் பழமையான ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி யில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி யிலிருந்து ரூ.18 லட்சத்து 50 ஆயிரம் மதிப் பீட்டிலும், குழந்தை நேய பள்ளி உட்கட்ட மைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சம் மதிப்பீட்டிலும் வகுப்பறை கட்ட டங்கள் கட்டப்பட்டுவருவதை ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து மாணவர்களிடம் கற்றல் திறன் குறித்தும், பள்ளியில் கழி வறை வசதி, குடிநீர் வசதி குறித்தும், உணவு தரமாக வழங்கப்படுகிறதா என்றும் கேட்ட றிந்தார். தொடர்ந்து பள்ளியில் உள்ள கழி வறை சுத்தமாக உள்ளதா? என்றும், சுத்த மான குடிநீர் வழங்கப்படுகிறதா? என்றும் ஆய்வு செய்தார். தொடர்ந்து பள்ளியில் கட்டப்பட்டு வரும் வகுப்பறைகளின் தரம் குறித்துய் ஆய்வு செய்தார். ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி, ஒன்றிய ஆணையர் மீனா, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினர் செந்தில், ஊராட்சி செய லாளர் வெங்கடேசன், பள்ளி தலைமை ஆசிரியர் ஞானப்பிரகாசம் மற்றும் அலு வலர்கள் உடன் இருந்தனர்.