திண்டுக்கல், டிச.6- பாலியல் வன்கொடுமை களுக்கு எதிராக இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மாநில சிறப்பு மாநாடு டிசம்பர் 5 அன்று திண்டுக் கல்லில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பின ரும் ஜனநாயக மாதர் சங்க தலை வர்களில் ஒருவருமான கே.பால பாரதி கூறியதாவது: தனியார் பள்ளி, கல்லூரி களில் மாணவிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தனியார் நிறுவனங்கள் அனைத்துமே அங்கே வரக்கூடிய எந்தவித புகார்களையும் எடுத்துக்கொள் ளாமல் மூடி மறைக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் நீதிமன்றத் திற்குச் சென்று நியாயம் கேட் கக்கூடிய குழந்தைகளுக்கு நீதி மன்றமே அநீதி வழங்குவதைப் போல பாலியல் குற்றவாளிக ளுக்கு ஜாமீன் கொடுப்பது ஏற்பு டையது அல்ல.ஒரு உயர்ந்த இடத்தில் இருக்கக்கூடிய நீதி மன்றங்கள் குற்றவாளிகளை கைது செய்து சட்டரீதியாக நட வடிக்கை எடுங்கள், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்று மாணவர்கள், மாணவர் சங்க அமைப்புகள், பெற்றோர்கள் நீதிமன்றத்திற்கு செல்கிறோம்.
ஆனால் நீதி மன்றங்களோ குற்றவாளிக்கு ஜாமீன் வழங்குகின்றன. திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந் தரவு கொடுத்த தாளாளருக்கு 2 குற்றங்களின் மீது ஜாமீன் கிடைத்திருக்கிறது. அடுத்து இன்னொரு குற்றத்தின் மீது ஜாமீன் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகிளா நீதிமன்றம் மாணவர்களின் உணர்வுகளை தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். பெற்றோர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்.
இது ஒரு சமூக பிரச்சனை. இந்த சமூக பிரச்சனையில் நீதிமன்றம் வழி காட்ட வேண்டும். திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் தனியார் நர்சிங் கல்லூரி தாளாளருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. இந்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக இந்த மாநாட்டில் மாணவ, மாணவியர்கள் விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். மாணவர் அமைப்புகள், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்டு தமிழகத்தின் பெண்கள் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகள் நீதி மன்றங்களும், நீதிபதிகளும், மாணவிகளுக்கு எதிராக நடை பெறும் குற்றங்களை தடுத்து நிறுத்துவதற்கு சரியான நீதியை வழங்க வேண்டும். குற்றவாளிகளுக்கு எந்த சூழ்நிலையிலும் பாதுகாப்பு வழங்கக்கூடாது. அதனையும் மீறி குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுத்தால் நாங்கள் நீதிமன் றங்களுக்கு எதிராக போராடு வோம். இவ்வாறு அவர் கூறினார்.