districts

img

ஓய்வூதிய மாற்றம் கோரி மனு கொடுக்கும் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 2 - ஊதிய மாற்றத்தில் இருந்து டிலிங்க் (Delink) செய்து ஓய்வூதிய மாற்றம் வழங்க வேண்டும். 3 ஆவது பி.ஆர்.சி அடிப்படையில் 1.1.2017 முதல் 15 சதவீதம் பிட்மென்ட்வுடன் ஓய்வூதிய மாற்றம் வழங்க வேண்டும்.

2017-க்கு பின் ஓய்வு பெற்ற வர்களுக்கு பயன்படும் வகையில் Notional Fixation உடன் ஓய்வூதிய மாற்ற வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூ தியர் சங்கம், எஸ்.என்.பி. டபுள்யூஏ மற்றும் பிடிபிஏ (ஐ) சங்கங்கள் சார்பில் பிஎஸ்என்எல் பொது மேலா ளர் அலுவலக வளாகத்தில் செவ்வாயன்று கோரிக்கை மனு கொடுக்கும் போராட் டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு ஏஐபி டிபிஏ மாவட்டத் தலைவர் ஜான்பாட்ஷா, பிடிபிஏ(ஐ) தலைவர் அப்துல் வகாப் ஆகியோர் தலைமை வகித்த னர். கோரிக்கைகளை விளக்கி பிஎஸ்என்எல்இயூ மாநிலப் பொருளாளர் அஸ்லாம் பாட்ஷா, மாவட் டச் செயலாளர் சுந்தர்ராஜ், என்.சி.பி.ஏ மாவட்டச் செய லாளர் கோபால்சாமி ஆகியோர் பேசினர்.  முன்னதாக ஏஐபிடிபிஏ மாவட்டச் செயலாளர் இளங்கோவன் வரவேற் றார். மாநில அமைப்பு செய லாளர் தேவராஜ் நன்றி கூறினார்.