districts

இலுப்பக்குடியில் அறிவியல் திருவிழா

சிவகங்கை, மே 25-

    சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியத்தில் இலுப்பக்குடி  கிராமத்திலுள்ள வடக்கு குடியிருப்பு பகுதி யில்  அறிவியல் திருவிழா நடைபெற்றது. சாக்கோட்டை ஒன்றிய வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வகுமார் தலைமை வகித்தார். இல்லம் தேடிக் கல்வி திட்ட   வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் கண்ணன் முன்னிலை  வகித்தார். வானவில் மன்ற ஸ்டெம் கருத்தாளர் ஜோதி  வரவேற் றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டச் செய லாளர் ஆரோக்கியசாமி சிறப்புரையாற்றினார். எளிய அறிவி யல் சோதனைகள், விந்தை கணக்குகள், புதிர் கணக்குகள்,  ஓவியங்கள் தீட்டுதல், மந்திரமா?தந்திரமா?, வடிவங்கள் அமைத்தல், ஓரிகாமி போன்ற செயல்பாடுகள் மாணவர் களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.