districts

img

பட்டியலின பழங்குடியினர் துணைத்திட்ட சட்டநகல் வரைவு கலந்தாய்வு கூட்டம்

திருநெல்வேலி, ஜூலை 2- 

   பாளையங்கோட்டை சமாதான புரத்தில் உள்ள ஏடிஎம்எஸ் மகாலில் பட்டியலின பழங்குடியினர் துணைத்  திட்ட சட்டநகல் வரைவு கலந்தாய்வு  கூட்டம் சனிக்கிழமை மாலை நடை பெற்றது.  

    இந்தக் கூட்டத்திற்கு தமிழ்நாடு  தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைத் தலைவர் துரை ராஜ் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் எம்.சுடலைராஜ் வர வேற்று பேசினார், டாக்டர் ராமகுரு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில குழு உறுப்பினர் பூ.கோபாலன், துணைத் தலைவர் செல்வராஜ், வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் அருள் சைலேஷ்,வி.தொ.ச மாவட்ட செயலாளர் அரு ணாச்சலம், மாதர் சங்க மாவட்ட துணை தலைவர் முத்துமாரி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். தமிழ்  நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைப் பொதுச் செயலா ளர் கே.சுவாமிநாதன் கலந்தாய்வு கூட்டத்தை துவக்கி வைத்தார்

    கூட்டத்தில் தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாநிலக்  குழு உறுப்பினரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஆர்.கிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தை கட்சி மாவட்டச் செயலாளர் கரிசல் சுரேஷ்,  எஸ்சி, எஸ்டி வெல்ஃபர் அசோசி யேசன் ஹரிராம், தமிழர் உரிமை மீட்பு கள ஒருங்கிணைப்பாளர் லெனின் கென்னடி, மனித உரிமை களம் பரதன், திராவிட தமிழர் கட்சி மாவட்ட பொதுச் செயலாளர் கதிர வன், தமிழ்ப் புலிகள் கட்சி மாவட்டச் செயலாளர் தமிழரசு, ஆதித்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் ராம மூர்த்தி, எஸ்சி, எஸ்டி எம்ப்ளாயிஸ் யூனியன் அம்பேத்கர், பூர்வீக தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர்  பாலமுருகன், தமிழ்நாடு தீண்டாமை  ஒழிப்பு முன்னணி தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் சக்திவேல் முருகன், குமரி மாவட்டச் செயலா ளர் சசி இந்திரன், தென்காசி மாவட் டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நவபோதி பண்பாட்டு மைய நிறு வனர் முருகன் கண்ணா ஆகியோர் கருத்துரையாற்றினர்.

    தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலா ளர் கே.சாமுவேல்ராஜ் நிறைவுரை யாற்றினார். மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் பழனி நன்றி கூறி னார். கலந்தாய்வுக் கூட்டத்தில் தமிழ்  நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் மதுபால் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.