திருச்சிராப்பள்ளி, ஜூன் 11-
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. இவை ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு மண்டத்திலும் வீடுகள் தோறும் குப்பைகளை சேகரிக்க வார்டுக்கு 20-க்கும்மேற்பட்டோர் என சுமார் 300 தொழிலாளர்கள் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம்; வேலை செய்து வந்தனர். தற்போது இந்த வேலையை மாநகராட்சி நிர்வாகம் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கி உள்ளது.
தனியார் ஒப்பந்த நிறுவனம் மூன்றா வது மண்டலத்தில் வார்டுக்கு பத்து தொழிலாளர்களுக்கு மட்டும் வேலை வழங்கி ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. முன்பு கொடுத்த கூலியை விட குறைந்த கூலியே கொடுக்க உள்ள தாகவும் தகவல் வெளியானது.
இதையடுத்து சிஐடியு திருச்சிராப் பள்ளி மாநகராட்சித் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் துணைத்தலைவர் ராம சாமி தலைமையில் ஆயில்மில் அருகே 300-க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் ஞாயிறு அன்று வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து மாநகராட்சி உதவி ஆணையர் ரமேஷ உள்ளிட்ட அதிகாரி கள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலை வர் இளையராஜா, மாவட்டப் பொருளா ளர் விஜயன், கனகசுந்தரி, ராஜம், அம்மாசி, விமலா ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வேலை வழங்கப் படும் என உறுதியளிக்கப்பட்டது. இதை யடுத்து வேலை நிறுத்தம் தற்காலிக மாக ஒத்திவைக்கப்பட்டது.