வங்கி மூலம் சம்பளம் வழங்கவேண்டும். பழி வாங்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கவேண்டும். வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யவேண்டும் என வலியுறுத்தி அரியலூரில் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநிலப் பொதுச் செயலாளர் ஆத்மநாதன், மாவட்டப் பொதுச் செயலாளர் மருதராஜ், சிஐடியு மாவட்டச் செயலாளர் பி துரைசாமி, ஆர்.சிற்றம்பலம், எம்.சந்தானம் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.