districts

கும்பகோணம் பொருட்காட்சியில் அதிக கட்டணம் வசூல்

கும்பகோணம், மே 17- கும்பகோணத்தில் நடைபெறும் தனியார் பொருட்காட்சிகளில் சுகாதார கேடுகளுடன் அதிக கட்டணம் வசூலிப் பதை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மாநக ராட்சி ஆணையருக்கு புகார் மனு அனுப்பினர்.  அந்த புகார் மனுவில் தெரிவித்தி ருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணத்தில் தனியார் பள்ளிக்கூடம் மைதா னத்தில், தனியார் பொருட்காட்சி சில  தினங்களாக நடந்து கொண்டு வரு கிறது. இந்தப் பொருட்காட்சியில் நுழைவு கட்டணத்தில் தொடங்கி, உள்ளே விற்பனை செய்கிற பொருட் கள் மற்றும் குழந்தைகள் விளையாடு கிற பொழுது போக்கு மற்றும் பல்வேறு  அம்சங்கள் அனைத்துக்கும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  குறிப்பாக ஒவ்வொரு நபருக்கும்  நுழைவு கட்டணமாக ரூ.60 வசூலிக் கப்படுகிறது. பொருட்காட்சியின் உள்ளே சிறுவர்கள் விளையாடுகிற விளையாட்டுத் தொட்டிகள் மற்றும்  பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்துமே 90 ரூபாய் 100 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் பொருட்களில் உள்ள  விலைப் பட்டியலுக்கு அதிகமாக பல்வேறு பொருள்கள் விற்பனை  செய்யப்படுகின்றன. ஆயிரக்கணக்கான  மக்கள் கூடுகிற இந்த இடத்தில் கழிப் பிடங்களும் மிக மோசமாக உள்ளன. சிறுவர்கள் படகு சவாரி செய்கிற இடத்தில் உள்ள தண்ணீர் மிகவும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சிறு வர்களுக்கு பல்வேறு உடல் நலக் கேடு கள் வர வாய்ப்புள்ளது. குடிதண்ணீர் ஏற்பாடு என்பது துளி யும் செய்யப்படவில்லை. குடிக்க தண்ணீர் கேட்டால், ‘விற்பனை தண்ணீரை  வாங்கி குடியுங்கள்’ என்று எல்லா கடைக்காரர்களிடமிருந்து பதில் கிடைக் கிறது. குடிக்க தண்ணீர் எந்த இடத்தி லும் ஏற்பாடு செய்யப்படவில்லை. கும்பகோணம் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து எளிய மக்கள் முதல், அனை வரும் இந்த விடுமுறை தினத்தில் பொருட்காட்சி காண வருகின்றனர். இந்நிலையில், நுழைவு கட்டணம் முதல் பொருட்காட்சியில் பல்வேறு கட்டணங்கள் மிக மிக அதிகமாக இருக் கின்றன. இதனால் பொருட்காட்சிக்கு வருகிறவர்களுக்கு பல்வேறு சிர மங்களும் பிரச்சனைகளும் ஏற்படு கின்றன. எனவே கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகமும், தஞ்சை மாவட்ட நிர்வாக மும் மக்கள் நலன் கருதி, பொருட்காட் சியில் அதிக கட்டணம் வசூலிக்கப்படு வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பொருட்காட்சியின் ஏற்பாட்டாளர் களோடு பேசி, நியாயமான கட்ட ணத்தை வசூலிக்கவும், இப்படியான சுகாதாரக் கேடுகளை தடுக்கிற வகை யில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;