districts

பாபநாசம் அரசுப்பள்ளி சாதனை

பாபநாசம், ஜூலை 13-

     சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் என்சிசி மாண வர்களுக்கான பயிற்சி வகுப்பு ஜூலை 1-ஆம் தேதி முதல் ஜூலை 10-ஆம்  தேதி வரை நடைபெற்றது. முகாமில் பாபநாசம் அரசினர் ஆண்கள்  மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 9, 10- ஆம் வகுப்பு மாணவர்கள் 40 பேர் பங்கேற்றனர். இதில் துப்பாக்கி சுடுதல், கப்பல் கட்டுவது, கயிறு  முடிச்சு போடுவது, சிக்னல், டிரில் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள்  அளிக்கப்பட்டது. இப்பள்ளி மாணவர்கள் சிறந்த என்சிசி மாணவர் களுக்கான விருது பெற்றுள்ளனர். விருது பெற்ற மாணவர்களை பள்ளித் தலைமையாசிரியர் மணியரசன் பாராட்டினார்.