அறந்தாங்கி, ஜூலை 1 -
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பெருநாவலூர் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவியருக் கான கூடுதல் நவீன கழிப்பறைகள் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தலைமையேற்று, நவீன கழிப்பறைகள் திறந்து வைத்தார். கல்லூரி முதல்வர் பேரா.வீ.பாலமுருகன் தொடக்க வுரையாற்றினார். அறந்தாங்கி மேனாள் சட்டமன்ற உறுப்பி னர் உதயம் எஸ்.சண்முகம், ஐடிசி நிறுவனத்தின் பொது மேலா ளர் என்.டி.விஸ்வநாத், அறந்தாங்கி நகர்மன்றத் தலைவர் இரா.ஆனந்த், அறந்தாங்கி ஒன்றியப் பெருந்தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், கீரமங்கலம் பேரூராட்சித் தலை வர் சிவக்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஐடிசி நிறுவன மேலாளர்கள், நிறுவனர் ஆனந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.