districts

மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள ஒன்றிய அமைச்சர் எவ்வளவு கொடுத்தாலும் மண்டியிட மாட்டோம்!

அமைச்சர் பேட்டி கும்பகோணம், பிப்.27- தமிழக மக்களின் எதிர்ப்பை உணர்ந்து இந்தி திணிப்பை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள ஒன்றிய அமைச்சர் எத்தனை கோடி  கொடுத்தாலும் மண்டியிட மாட்டோம் என தமிழக உயர் கல்வி அமைச்சர் கோவி. செழி யன் கூறினார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழக முத லமைச்சராக இருந்த அண்ணாவின் தலைமை யில், தமிழகத்தில் முதன் முதலில் இரு மொழிக் கொள்கை சட்டமாக்கப்பட்டது. அதை இன்றளவும் நடைமுறைப்படுத்தி வருகிறோம். தற்போது ஒன்றிய அரசு மும்மொழி கல்வி கொள்கையை திணிக்கிறது. மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண் டால் ரூ.10 ஆயிரம் கோடி தருவதாக ஒன்றிய  அமைச்சர் கூறுகிறார். எத்தனை கோடி கொடுத் தாலும் மண்டியிட மாட்டோம், மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என  துணிந்து சொன்னவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எவ்வளவு இடர்பாடு வந்தாலும்  இந்தி திணைப்பை ஏற்றுக் கொள்ளமாட்டோம்.  இந்த எதிர்ப்பை உணர்ந்து ஒன்றிய அரசு இந்தித்  திணிப்பை கைவிட வேண்டும். இதுதொடர்பான  சட்டப் போராட்டம், சட்டமன்ற போராட்டம் தமிழ கத்தில் தொடரும்” என்றார்.