districts

img

பாபநாசத்தில் புதிதாக மின் மாற்றி அமைப்பு

பாபநாசம், பிப்.5-  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் புதிதாக மின் மாற்றி அமைக்கப்பட்டது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் பாபநாசம் வடக்கு வீதி, சீனிவாச பெருமாள் கோவில், அரையபுரம், திருப்பாலத்துறை ஏ.பி.எம் நகர், அன்னகுடி உள்ளிட்ட  இடங்களில் ரூ.21 லட்சம் மதிப்பில் மின்னழுத்த குறைபாட்டினை போக்குவதற்காக 63 கிலோவாட் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.  புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை பாபநாசம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருணாகரன் துவக்கி வைத்தார். இதில் பாபநாசம் உதவி மின் பொறியாளர் ரஞ்சித் குமார், ஆக்க முகவர்கள் கோபாலகிருஷ்ணன், ஜான் பீட்டர், மின் ஆய்வாளர் ராஜகோபால், மின் பணியாளர்கள் முருகன், சங்கர், ரவி பிரதீப், தமிழரசன், கார்த்தி, ஜான்சன் உட்பட கலந்து கொண்டனர்.