மயிலாடுதுறை, மார்ச் 25- மயிலாடுதுறையில் மாவட்ட அமர்வு நீதிமன்றம் சனிக்கிழமையன்று திறக்கப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் டாக்டர் டி.ஓய்.சந்திர சூட் முன்னிலையில், மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்திலிருந்து காணொலி வாயிலாக தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறையில் அமைக் கப்பட்டுள்ள மாவட்ட மற் றும் அமர்வு நீதிமன்றத்தை திறந்து வைத்தார். ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு, முதன்மை குற்ற வியல் நடுவர் நீதிமன்றத்தை திறந்து வைத்தார். மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுரை உயர்நீதிமன்ற நீதி யரசர் ஆர்.தாரணி, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சிவ ஞானம், மயிவாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகா பாரதி, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப் பாளர் என்.எஸ் நிஷா, நாடா ளுமன்ற உறுப்பினர் செ. இராமலிங்கம், பூம் புகார் சட்டமன்ற உறுப்பி னர் நிவேதா.எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பி னர் எம்.பன்னீர்செல்வம், மயி லாடுதுறை சட்டமன்ற உறுப் பினர் எஸ்.ராஜ்குமார் ஆகி யோர் கலந்துகொண்டனர்.