தஞ்சாவூர், டிச.23- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி டாக்டர்.ஜே.சி.குமரப்பா செண்டினரி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், கணிதமேதை சீனிவாச ராமானுஜன் பிறந்த தினமான டிசம்பர் 22 ஆம் தேதி, தேசிய கணித தினத்தில், மாணவர்களுக்கு கணித திறனாய்வு தேர்வு நடைபெற்றது. இதில், தமிழ்நாடு தனியார் பள்ளி தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் டாக்டர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமை வகித்து தொடங்கி வைத்து பேசினார். முன்னதாக 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள, சுமார் 450 மாணவர்களுக்கு கணிதத் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது. இதில், பள்ளி நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை, பள்ளி அறங்காவலர்கள் ராமு, கணபதி, ஆனந்தன், நபிஷாபேகம், குமரப்பா அறக்கட்டளை பொருளாளர் அஸ்வின்ஸ்ரீதர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி முதல்வர் சுரேஷ் வரவேற்றார். ஆசிரியர் அரவிந்தன் நன்றி கூறினார்.