districts

img

பெரம்பலூர் பகுதியில் தொடர் திருட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், அக்.18-  பெரம்பலூர் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது. இதனால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளதாக வும் பல்வேறு இடங்களில் நடை பெற்ற கொள்ளை சம்பவத்தி ற்கு புகார் அளித்தும் காவல் துறை உரிய நடவடிக்கை எடுப்ப தில்லை எனக் கூறியும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்களன்று காவல் துறையை கண்டித்து புதிய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதற்கு, சிபிஎம் நகர செய லாளர் சிவானந்தம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.செல்லதுரை கண்டன உரை யாற்றினார். கரும்பு விவசாயி கள் சங்க மாவட்ட தலைவர் ஏ.கே.ராஜேந்திரன், சிபிஎம் நிர்வாகி பி.கிருஷ்ணசாமி, மாதர் சங்கம் எ.கலையரசி, ஆட்டோ சங்கம் ரெங்கநாதன், எஸ்.கே.சரவணன், சாலையோர வியாபாரிகள் சங்கம் பி.ரெங்க ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.