புதுக்கோட்டை மாவட்டம் திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி ஆலயத்தில் மார்கழி திருவாதிரை திருவிழா கடந்த டிச.10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒன்பதாம் நாளான சனிக்கிழமையன்று தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.