திருவாரூர், மே 2-
திருவாரூர் மாவட்டத்தில் மே தினம் கொண்டாடப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருவாரூர் மாவட்டக்குழு அலு வலகத்தில் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி மே தினத்தை யொட்டி செங்கொடியை ஏற்றினார். மூத்த தோழர் எஸ்.கைலாசம் நகர் செயலாளர் (பொறுப்பு) என்.ராஜ சேகர், எம்.தர்மலிங்கம், மாவட்டக் குழு உறுப்பினர் ஜி. பழனிவேல், எஸ்.ராம சாமி உள்ளிட்ட பலர் கலந்து பங் கேற்றனர்.
குடவாசலில் நகர் செயலார் டி.ஜி. சேகர், ஒன்றியச் செயலாளர் எம்.கோபி நாத் தலைமையில் நடைபெற்ற நிகழ் வில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.கலைமணி கொடியேற்றினார்.
மாவட்டக்குழு உறுப்பினர்கள் எப்.கெரக்கோரியா, ஆர்.லெட்சுமி ஆகி யோர் பங்கேற்றனர். எரவஞ்சேரியில் ஒன்றியச் செய லாளர் கே.ரவிச்சந்திரன் கொடியேற்றினார். கொரடாச்சேரியில் ஒன்றியச் செய லாளர் டி.ஜெயபால் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்டச் செய லாளர் ஜி.சுந்தரமூர்த்தி கொடியேற்றி னார்.
அரசவனங்காடு, திருக்கண்ண மங்கை, குளிக்கரை கிளேரியம் உள் ளிட்ட பகுதிகளிலும்கொடியேற்றப்பட் டது. மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.தம்புசாமி, கே.சீனிவாசன், கே.எஸ்.செந்தில், வாலிபர் சங்க மாவட் டத் தலைவர் எம்.எஸ்.ஜெய்கிஷ் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பேரளம் கட்சி அலுவலகத்தில் ஒன் றியச் செயலாளர் கே.எம்.லிங்கம் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர் கொடியேற்றி னர். மொத்தம் 15 இடங்களில் கொடி யேற்றப்பட்டது. வலங்கைமான் ஒன்றியத்தில் ஒன்றியச் செயலாளர் என்.இராதா தலைமையில் நடைபெற்ற கொடி யேற்று நிகழ்வில் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் வி.எஸ். கலியபெரு மாள் கொடியேற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் கே.சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திருவாரூர் போக்குவரத்து பணி மனை ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) சார்பில் நடைபெற்ற மே தின நிகழ் விற்கு மாவட்டத் துணைத் தலைவர் எம்.அம்பேத்கர் தலைமை வகித்தார். துணைப் பொதுச் செயலாளர் எம். மோகன் கொடியேற்றினார். மாவட்டத் தலைவர் எம்.கே.என்.அனிபா உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மன்னார்குடி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மன்னார்குடி நகர்க்கழு அலு வலகத்தில் நகர் செயலாளர் ஜி.தாயு மானவன் கொடியேற்றினார். ‘
மன்னார்குடி நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் (சிஐடியு) கொடியேற்றி மேதினத்தை கொண்டாடினர்.
மன்னார்குடி அரசுப் போக்கு வரத்துக் கழக பணிமனையின் முன்பு சிஐடியு கொடியை அரசுப் போக்கு வரத்துக் கழக ஊழியர் சங்கப் பொதுச் செயலாளர் ஏ.கோவிந்தராஜ் ஏற்றி னார். இணைப்பு சங்க நிர்வாகிகள் டி. ஜெகதீசன், கே.சிவசுப்பிரமணியன், டி. சந்திரா, கோபாலகிருஷ்ணன், வீ.கோவிந்த ராஜ், ஆ.ஹரிகரன், ஜி.மாரிமுத்து தியாக சிவசுப்பிரமணியன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். மன்னார்குடி நக ரில் 13 இடங்களில் மே தினத் கொடி யேற்றப்பட்டது. தொடர்ந்து நடை பெற்ற பேரணிக்கு சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் ஜி.ரகுபதி தலைமை வகித்தார்.
அரியலூர்-ஆண்டிமடம்
ஆண்டிமடத்தில் வட்டச் செயலா ளர் வி.பரமசிவம் தலைமையில் நடை பெற்ற கொடியேற்று நிகழ்வில் மாவட் டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மணி வேல் மாவட்டக் குழு உறுப்பினர்கள் இ.இளவரசன், என்.அருணாச்சலம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.