திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கொள்ளிடம் பாலப் பணிகள் மற்றும் நீர்வரத்து, நீர் வெளியேற்றம் குறித்து நேரிலும், புகைப்படக் காட்சியினையும் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் சனிக்கிழமை பார்வையிட்டு செய்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, தியாகராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.