districts

வெளிநாட்டு வேலை மோசடிகள்: கரூர் ஆட்சியர் எச்சரிக்கை

கரூர், ஜூன் 3 - தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் போதிய விழிப்புணர்வு இல்லாத, கணினி தொடர்பான கல்வி பயின்ற இளைஞர்களை முறையான அரசு  அங்கீகாரம் பெறாத போலி முகவர்கள்,  சமூக வலைதளம் மூலமாக போலி யான சமூக வலைதள பதிவுகள், துண்டு  பிரசுரங்கள் மூலம் மூளைச்சலவை செய்கின்றனர். அதன்மூலம் கம்போடியா, தாய்லாந்து மற்றும் மியான்மர் நாட்டில்  ‘டிஜிட்டல் சேல்ஸ் அண்ட் மார்கெட்டிங்  எக்ஸிகியூட்டிவ்’ (Digital Sales and Marketing Executive) ‘தரவு உள்ளீட் டாளர்’ (Data Entry Operator) போன்ற  வேலைகளில், ‘அதிக சம்பளம்’ என்ற  பெயரில், நபருக்கு சுமார் ரூ.2 முதல் 4  லட்சம் வரை பெற்றுக் கொண்டு சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்துச் செல்கின்றனர்.  அவ்வாறு அழைத்துச் செல்லப்ப டும் இளைஞர்களின் விசாவை நீட்டிப்பு  செய்வதாக கூறி, அவர்களின் கடவுச் சீட்டுகளை விமான நிலையத்திலேயே பறிமுதல் செய்து கொண்டு, கால் சென்டர் மோசடி, தரவுகளை சேகரித்தல்  (Social Media accounts/Profile, Social apps/website, like matri mony site, recruitement sites, intern ship offers, dating apps, online apps,  courier sites, etc.) மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி (Online Scamming) போன்ற சட்ட விரோதச் செயல்களில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துகின்றனர். அவ்வாறு செய்ய மறுக்கும் நிலை யில், அவர்கள் மீது மின்சாரம் செலுத்தி துன்புறுத்துதல், எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி உணவு வழங்காமல் இருட்டறையில் அடைத்து வைத்தல், பிற பணியாளர்கள் முன்னிலையில் அவமானப்படுத்துதல் மற்றும் துன்பு றுத்துதல் போன்ற தகவல்கள் தொ டர்ந்து வருகின்றன. 

அயலகத் தமிழ் துறை

மேலும், வீட்டு வேலை செய்ய வெளிநாடு செல்பவர்களும் எளிதாக ஏமாற்றப்பட்டு பாதிக்கப்படுகின்றனர். எனவே, இது போன்ற சம்பவங்கள் நிக ழாமல் தடுக்க, வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக செல்லும் இளை ஞர்கள், வெளியுறவுத்துறை அமைச்ச கத்தின் மூலம் பதிவு செய்யப்பட்ட முக வர்கள் மூலம், வேலைக்கான விசா,  முறையான பணி ஒப்பந்தம், என்ன பணி? போன்ற விவரங்களை சரியாக வும், முழுமையாகவும் தெரிந்து கொள்ள  வேண்டும். அவ்வாறான பணிகள் குறித்து உரிய  விவரங்கள் தெரியாவிடில், தமிழ்நாடு  அரசின் “அயலகத் தமிழர் நலத்துறை”  அல்லது குடிபெயர்வோர் பாதுகாப்பு அலுவலர், சென்னை அல்லது சம்பந்தப் பட்ட நாட்டில் உள்ள இந்தியத் தூதர கங்களை தொடர்பு கொண்டு பணி செய்யப் போகும் நிறுவனங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும். மேலும், இந்திய வெளியுறவுத் துறை மற்றும் வேலைக்குச் செல்லும்  நாடுகளிலுள்ள இந்திய தூதரகங்களின்  இணையதளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளின் படியும், வெளிநாட்டு வேலைக்குச் செல்லுமாறு இளைஞர் கள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இது தொடர்பாக அங்கீகரிக்கப் பட்ட முகவர்கள் விவரங்களை www. emigrate.gov.in என்ற இணையதளத் தில் அறிந்து கொள்ளலாம். மேலும் சென்னை குடிப்பெயர்வு பாதுகாப்பு அலுவலக உதவி எண்.90421 49222 மூல மாகவும், poechennai1@mea.gov.in,  poechennai2@mea.gov.in ஆகிய மின்னஞ்சல் மூலமாகவும் இது தொடர் பான சந்தேகங்களுக்கு விளக்கங்கள் பெறலாம். வெளிநாடுகளிலுள்ள தமிழர் களுக்கு உதவிபுரிய தமிழ்நாடு அரசின் “அயலகத் தமிழர் நலத் துறை” செயல்பட்டு வருகிறது. வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு உதவி தேவைப்படின் தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத் துறையின் கட்டணமில்லா 24 மணி  நேர அழைப்புதவி மையத்தின் 1800 3093 793, 80690 09901, 80690 09900  (Missed Call No.) ஆகிய தொடர்பு  எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மேற்கண்ட தமிழக அரசின் வழி காட்டுதல்களை பின்பற்றி இனிவரும்  காலங்களில், இது போன்ற சம்ப வங்கள் நிகழ்வதை தவிர்க்கும் பொருட்டு,  பொதுமக்கள் அனைவரும் விழிப்பு ணர்வுடன் செயல்பட கரூர் மாவட்ட  ஆட்சியர் மீ.தங்கவேல் அறிவுறுத்தி யுள்ளார்.