districts

திருச்சி முக்கிய செய்திகள்

வாக்குப்பதிவு  இயந்திரங்கள் ஆய்வு

பாபநாசம், மார்ச் 22 - மக்களவைத் தேர்தலையொட்டி, மயி லாடுதுறை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பாபநாசம் சட்டமன்றத்  தொகுதி வாக்குச்சாவடி களில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவி பேடு இயந்திரங்கள் வைக்கும் பாதுகாப்பு அறை பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவ லகத்தில் அமைந்துள் ளது. இதை தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலு வலர் தியாகராஜன் நேரில்  ஆய்வு செய்தார். பாப நாசம் சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன், பாப நாசம் தாசில்தார் மணி கண்டன், தேர்தல் துணை  தாசில்தார் விவேகானந் தன் உள்ளிட்டோர் உட னிருந்தனர்.

தண்ணீர் பந்தல் திறப்பு

பாபநாசம், மார்ச் 22 - தஞ்சாவூர் மாவட்டம்  பாபநாசம் வழக்கறி ஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் கோடைக் கால தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பாபநாசம் நீதி மன்ற நீதிபதி அப்துல் கனி, கோடைக் கால தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு நீர் மோர், தர்ப்பூசணிகளை வழங்கி னார். பாபநாசம் வழக்கறி ஞர் சங்கத் தலைவர் பாஸ்கரன் மற்றும் நீதி மன்ற ஊழியர்கள் பங்கேற்றனர்.  சுற்றுச்சூழல் 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தஞ்சாவூர், மார்ச் 22-  தஞ்சை மருதுபாண்டி யர் கல்லூரியில், மாவட்ட  அளவிலான சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்த  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச் சிக்கு மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருது பாண்டியன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தி னராக எம்.ஆர். மருத்து வமனை மருத்துவர் ராதிகா மைக்கேல் உரை யாற்றினார்.  நிகழ்ச்சி யில், பழனிவேலு குழு வினரின் சுற்றுச்சூழலை நாம் எவ்வாறு பாதுகாக்க  வேண்டும் என்ற பொம்ம லாட்ட நிகழ்ச்சி நடை பெற்றது.

தொழுநோய்: வழிகாட்டி கையேடு வழங்கல்

புதுக்கோட்டை, மார்ச் 22 - தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம் சார்பில் முன் களப்பணியாளர் களுக்கான வழிகாட்டிக் கையேடு வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு பயிற்சி முகாம் திரு வரங்குளம் வட்டார அரசு  ஆரம்ப சுகாதார நிலை யத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராமச்சந்தர் தலைமை வகித்தார். வழிகாட்டிக் கையேட்டை முன்வைத்து வட்டார  சுகாதார மேற்பார்வையா ளர் ரமா ராமநாதன் பயிற்சியளித்தார். வட்டார சுகாதார மேற்பார் வையாளர் என்.முருகே சன், வட்டார கண் மருத்துவ உதவியாளர் எஸ்.பரணி ஆகியோர் பேசினர். முன்னதாக சுகா தார ஆய்வாளர் எம். ஸ்ரீசந்திரன் வரவேற்க, ரூபன் ராம் நன்றி கூறி னார்.

உலக வன நாள்  பள்ளி, கல்லூரிகளில்  விழிப்புணர்வு நிகழ்ச்சி

தஞ்சாவூர்/அரியலூர், மார்ச் 22-  வனங்களின் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் பலன்கள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஐக்கிய நாடுகளில் சபையின் பரிந்துரைப்படி, மார்ச் 21 இல் சர்வதேச வன நாள் கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி உத்தரவின்படி பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலகத்தில் வியாழக்கிழமை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பட்டுக்கோட்டை வனச்சரக அலுவ லர் ஏ.எஸ்.சந்திரசேகரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.  வனவர் சிவசங்கரன், காவல்துறை உதவி ஆய்வாளர் தங்கப்பன், தலைமை காவலர் மாரிமுத்து மற்றும் வனச்சரக  பணியாளர்கள் கலந்து கொண்டனர்.  இலுப்பை, புங்கன், வேம்பு உள்ளிட்ட பல்வேறு வகை யான மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், வனங்களை பாது காப்போம், வனவிலங்குகளை பாதுகாப்போம் என உறுதி மொழி ஏற்கப்பட்டது.  அரியலூர் அரியலூர் மாவட்டம், சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் வனத்துறை சார்பில் வியாழக்கிழமை விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூர் மாவட்ட வன அலு வலர் இளங்கோவன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித் தார். வனவர்கள் ஜீவராமன், சிவக்குமார், முருகேசன் உள்ளிட்டோர் பேசினர்.

அதிமுக முன்னாள் அமைச்சர்  விஜயபாஸ்கர் வழக்கு விசாரணை  ஏப்.25-க்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை, மார்ச் 22 - முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது  மனைவி ரம்யா ஆகியோரின் சொத்துக் குவிப்பு வழக்கில்,  தங்களை விடுவிக்கக் கோரி அளித்த மனுவுக்கு ஊழல் தடுப்பு  மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் பதில் அளிக்கக் கூறி,  ஏப்.25 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப் பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத்  தொகுதி அதிமுக உறுப்பினர் சி.விஜயபாஸ்கர், கடந்த அதி முக ஆட்சிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79  கோடி சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்கா ணிப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடை பெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணை  நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, விஜயபாஸ்கர் மற்றும்  அவரது மனைவி ரம்யா ஆகியோர் தரப்பில் வழக்குரை ஞர்கள் ஆஜராயினர். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் தொடர்ந்துள்ள வழக்கின் குற்றச்சாட்டை தாங்கள் முற்றிலும் மறுப்பதாகவும், அதனால் தங்களை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் இருவர் தரப்பிலும் தனித்தனியே மனு செய்யப்பட்டது. இம்மனுக்கள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்கா ணிப்புப் பிரிவு போலீசார் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி  கா.பூரண ஜெயஆனந்த், வழக்கு விசாரணையை ஏப்.25 ஆம்  தேதிக்கு ஒத்திவைத்தார்.

தேர்தல் செலவின பணிகள்: திருச்சியில் ஆலோசனைக் கூட்டம்

திருச்சிராப்பள்ளி, மார்ச், 22, நாடாளுமன்ற பொதுத் தேர்தலை யொட்டி, திருச்சிராப்பள்ளி தொகுதி களுக்குட்பட்ட ஸ்ரீரங்கம், திருச்சிராப் பள்ளி (மேற்கு) மற்றும் திருச்சிராப் பள்ளி (கிழக்கு) ஆகிய மூன்று சட்ட மன்ற தொகுதிகளுக்கு ஷ்ரம்தீப்  சிங்கா என்பவரையும், திருவெறும்பூர்,  கந்தர்வக்கோட்டை மற்றும் புதுக் கோட்டை சட்டமன்ற தொகுதிகளுக்கு முகேஷ்குமார் பிரம்கானே என்பவரை யும் தேர்தல் செலவின பார்வையாள ராக இந்திய தேர்தல் ஆணையம் நிய மித்துள்ளது. இதனை தொடர்ந்து, தேர்தல் செல வின பார்வையாளர்கள் ஷ்ரம்தீப் சின்ஹா, முகேஷ்குமார் பிரமனே ஆகி யோர் முன்னிலையில் மாவட்ட தேர்தல்  அலுவலர் பிரதீப் குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தேர்தல் செலவி னங்களை கண்காணிக்கும் பொருட்டு,  ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் 3 பறக்கும்படை குழுக்கள், 3 நிலை  கண்காணிப்பு குழுக்கள், 24 மணி நேரமும் கண்காணிக்க ஏதுவாக மூன்று  கட்டமாக இயங்கி வருகின்றன. இதுதவிர ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு வீடியோ கண்கா ணிப்பு (சர்வைலன்ஸ்) குழு, ஒரு வீடி யோ பார்வையிடும் குழு மற்றும் வேட் பாளர்களின் கணக்குகளை ஆய்வு  செய்வதற்காக, கணக்கு குழுக்களும் அமைக்கப்பட்டு, அனைத்து குழுக்க ளும் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் அறிவிக்கைக்கு பின்னர்  நாளது தேதி வரை, உரிய ஆவணங் களின்றி எடுத்து செல்லப்பட்ட சுமார் ரூ.70 லட்சம் ரூபாய் கைப்பற்றப் பட்டுள்ளது. என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சி யருமான பிரதீப் குமார் தெரிவித்தார். கூட்டத்தில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி, மாநகர காவல் ஆணையர் காமினி, மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் வருண்குமார்,  புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் வந்திதா பாண்டே, வரு மான வரித்துறை தொடர்பு அலுவலர் சுவேதா மற்றும் பல்வேறு செலவின ஆய்வுக் குழு அலுவலர்கள், மாவட்ட  நிலை அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.

திருவாரூரில் இன்று  வேட்பாளர் அறிமுகக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்

திருவாரூர், மார்ச் 22 - திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் உள்ள முத்தமி ழறிஞர் கருணாநிதி நினைவு அரங்கத்தில் மாபெரும் தேர்தல்  பிரச்சார பொதுக்கூட்டம் மார்ச் 23 (சனிக்கிழமை) அன்று மாலை தஞ்சை மற்றும் நாகை நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பணிக் குழு சார்பாக நடைபெறுகிறது. இந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல மைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் இரா. முத்தரசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற் கின்றனர். இதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி  வெற்றி வேட்பாளர்களான, திமுக ச.முரசொலி, சிபிஐ வேட் பாளர் வை.செல்வராஜ் ஆகியோரை அறிமுகப்படுத்தி இக் கூட்டம் நடைபெறுகிறது.

வேங்கைவயல் விவகாரம்: விசாரணை மார்ச் 25-க்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை, மார்ச் 22 - வேங்கைவயலில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர் பாக, குரல் மாதிரி சோதனைக்கு அனுமதி கோரி  சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த மனுவின் மீதான உத்தரவு வரும் மார்ச் 25 ஆம் தேதி பிறப்பிக்கப்படும் என நீதிபதி எஸ்.ஜெயந்தி அறி வித்தார். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் குறித்து தற்போது  சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற நாட்களில் அந்தப் பகுதிகளைச் சேர்ந்தோரின் வாட்ஸ்அப் உரை யாடல்களில் இருந்து குரல் மாதிரி பரிசோதனை  மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது. இதே சோ தனை ஏற்கெனவே இருவருக்கு மேற்கொள்ளப் பட்டுள்ளது. மேலும், 3 பேருக்கு குரல் மாதிரி  சோதனை நடத்த அனுமதி கோரி புதுக்கோட்டை  எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு  நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் அண்மை யில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.  இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ். ஜெயந்தி முன்னிலையில் வெள்ளிக்கிழமை  விசாரணைக்கு வந்தது. 3 பேரின் சார்பில் ஆஜ ரான வழக்குரைஞர் மலர்மன்னன், இந்தச்  சோதனைக்கு உடன்பாடில்லை எனத் தெரிவித் தார். இதைத் தொடர்ந்து இதுகுறித்த உத்தரவு மார்ச் 25 ஆம் தேதி பிறப்பிக்கப்படும் எனக் கூறி  நீதிபதி எஸ்.ஜெயந்தி விசாரணையை ஒத்திவைத் தார்.

தில்லி முதல்வர் கெஜ்ரிவால்  கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, மார்ச் 22 - தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான  கெஜ்ரிவாலின் கைதைக் கண்டித்து புதுக்கோட்டையில் இந்தியா கூட்டணி சார்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஆம் ஆத்மி கட்சியின் மாவட்டத் தலைவர் அப்துல்ஜப்பார் தலைமை வகித்தார்.  காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் வி.முருகே சன், மாநில சிறுபான்மையினர் பிரிவு துணைத் தலைவர்  இப்ராஹிம் பாபு, இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்  செயலர் ஜி.எஸ்.தனபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டப் பொருளாளர் என்.ஆர்.ஜீவானந்தம், மக்கள்  நீதி மய்யம் நிர்வாகி செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தஞ்சை தொகுதி வேட்பாளர்  முரசொலி வெற்றிக்கு பாடுபடுவோம்! விவசாயத் தொழிலாளர் சங்கம் உறுதி

தஞ்சாவூர், மார்ச் 22-  மக்களவைத் தேர்தலில், தஞ்சை தொகுதியில் இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முரசொலியின், வெற்றிக்காக பாடுபடுவது என அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.  அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில் மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு தலைமையில் நடைபெற்றது.  இதில், மாவட்டத் தலைவர் ஆர்.பிரதீப் ராஜ்குமார், மாவட்டப் பொருளாளர் சி.நாகராஜன், மாவட்ட துணைச் செயலாளர் கே.அபிமன்னன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில், “கிராமப்புற பின்தங்கிய தொழிலாளர்களின் ஒரே வாழ்வாதாரமான நூறு நாள் வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் மோடி தலைமையிலான பாஜக அரசை வீழ்த்த, இந்தியா கூட்டணியின் வேட்பாளராக தஞ்சையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முரசொலியின் வெற்றிக்கு பாடுபடுவது” என தீர்மானிக்கப்பட்டது.

வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்வு

புதுக்கோட்டை, மார்ச் 22 - இந்தியத் தேர்தல் ஆணைய உத்தரவின்படி, வாக்குச்சாவடியில் பணிபுரியவுள்ள தலைமை  அலுவலர்கள் மற்றும் அலுவலர்களை கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணியை புதுக் கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் ஐ.சா.மெர்சி ரம்யா தொடங்கி வைத்தார்.  புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குப்பதிவு அன்று 1,560 வாக்குச் சாவடிகளில், 7,648 தலைமை  அலுவலர்கள் மற்றும் அலுவ லர்கள் பணியாற்றிட உள்ளனர். இவர்களை கணினி குலுக்கல் முறை யில் தேர்வு செய்யும் பணியினை, மாவட்ட தேர்தல் அலுவலர் ஐ.சா.மெர்சி ரம்யா, வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.  இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) எஸ்.வெங்கடாசலம், தனி வட்டாட்சியர் (தேர்தல்) அ.சோனை  கருப்பையா, கணினி நிரலர் ஜான்பால் மற்றும் அரசு அலுவலர்கள் உட னிருந்தனர்.

‘போதையில்லா தமிழ்நாடு’ விழிப்புணர்வு முகாம்

தஞ்சாவூர், மார்ச் 22-  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஸ்ரீவெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரி மற்றும் வெங்கடேஸ்வரா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி, நாட்டு  நலப்பணித் திட்டம், காவல்துறை, ராணியம்மாள் கல்வி அறக் கட்டளை ஆகியவற்றின் சார்பில் கல்லூரி வளாகத்தில் ‘போதை இல்லா  தமிழ்நாடு’ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.  இதில், போதைப் பொருட்களின் தீமை குறித்து கல்லூரி முதல்வர்  முனைவர் எம்.கே.ராஜேந்திரன் தலைமை வகித்துப் பேசினார். காவல்துறை உதவி ஆய்வாளர் புகழேந்தி, சமூக ஆர்வலரும், கல்வியா ளருமான எஸ்.கௌதமன் விழிப்புணர்வு உரையாற்றினர். பொறியா ளர் சர்வம் சரவணன், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பணி களில் சிறப்பாக செயல்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.  போதைத் தடுப்பு சம்பந்தமான புகார் அளிப்பதற்கு 10581 என்ற  எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

திராவிடவியலின் வளர்ச்சிக்கு  இராபர்ட் கால்டுவெல்லின் பங்களிப்பு தேசியக் கருத்தரங்கம் தொடக்க விழா

தஞ்சாவூர், மார்ச் 22-  தமிழ்நாடு அரசால் தமிழ்ப் பல்கலைக்கழகம், மொழியியல் துறை யில் நிறுவப்பட்டுள்ள தமிழறிஞர் இராபர்ட் கால்டுவெல் தமிழ் ஆய்விருக் கையில், இராபர்ட் கால்டுவெல்லின் மொழியியல் பணிகளைப் போற்றும் வகையில் திராவிடவியலின் வளர்ச்சிக்கு இராபர்ட் கால்டு வெல்லின் பங்களிப்பு எனும் தேசிய கருத்தரங்கம் தொடக் விழா வியா ழனன்று நடைபெற்றது. துணைவேந்தர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்தார். கருத்தரங்கில் கால்டுவெல் ஆய்விருக்கையின் ஆய்வுத் தகைஞர் ந.நட ராசப்பிள்ளை நோக்கவுரை ஆற்றினார்.  இந்திய மொழிகளின்  நடுவன் நிறுவனம் மைசூரிலிருந்து சாம்மோகன்லால், ராமமூர்த்தி, பால குமார், சுந்தரராஜன், சுரேஷ், திராவிடப் பல்கலைக்கழகம் குப்பம்,  அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழ கம், பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட மொழியியல் வல்லுநர்கள் கலந்து கொண்ட னர். முதுநிலை ஆய்வுத் தகைஞர் ம.சிவசண்முகம், மேனாள் பேரவை உறுப்பினர் பசும்பொன், மக்கள் தகவல்தொடர்பு அதிகாரி முருகன்  மற்றும் மொழியியல் அறிஞர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் கலந்து  கொண்டனர்.

திண்டுக்கல் தொகுதியில்
தொண்டர்கள் தீவிரமாக களப் பணியாற்ற வேண்டும்

நத்தம், மார்ச் 22- திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக தலைமையி லான ‘இந்தியா’ கூட்டணி சார்பில்  போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சி தானந்தம் அறிமுக கூட்டம் நத்தத்தில் புதனன்று நடைபெற்றது. கூட்டத்தில், திமுக மாநில துணை  பொதுச் செயலாளரும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான ஐ. பெரியாசாமி தலைமை வகித்து சிபிஎம் வேட்பாளர் ஆர்.சச்சிதானந் தத்தை அறிமுகம் செய்து வைத் தார்.  கூட்டத்தில், அமைச்சர் ஐ.பெரிய சாமி பேசுகையில், ‘‘கடந்த நாடாளு மன்றத் தேர்தலைவிட, இம்முறை பல  லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். திண்டுக்கல் லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வெற்றி பெறுவது உறுதி.  சிறுபான்மை இன மக்கள் எப்பொ ழுதும் நம் பக்கம் தான் உள்ளனர்.  சிறுபான்மையினரை அரவணைக்க கூடிய இயக்கமாக திமுக உள்ளது  என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. அனைவரும் மத வேற்றுமை களையும் சாதிய உணர்வுகளையும் மறந்து ஒன்று கூடி குரல் எழுப்ப வேண்டும். அதுதான் இந்த தேர்த லின் முடிவாக இருக்க வேண்டும். இன்றைக்கு எந்த கட்சியும் பாஜக வுடன் கூட்டணி செல்ல மறுக்கிறார்  கள். பாஜக தேர்தலில் போட்டியிடு வதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். பாஜகவும் இந்தியா கூட்டணிக்கு எதிராக களமிறங்கும் மற்ற கட்சிகளும் ஒன்றுதான். இவை யெல்லாம் ஜனநாயகத்திற்கு எதிரா னவை, சர்வாதிகாரத்தை ஆதரிப் பவை.  நம் நாட்டின் முதல் சுதந்திரப் போருக்கு பிறகு இன்றைய அரசியல்  சூழலில் நடைபெறுகின்ற இந்த நாடா ளுமன்றத் தேர்தல் இரண்டாவது சுதந்திரப் போர். இந்த இரண்டாவது  சுதந்திர போரில் இந்தியா கூட்டணி  கைகோர்த்து நிற்கிறது. இதில்  வெற்றி உறுதி செய்யப்பட வேண்  டும். நாம் அனைவரும் தேர்தல்களத் தில் தீவிரமாக பணியாற்ற வேண்  டும். நாடாளுமன்றத்தில் சச்சிதானந் தத்தின் பணி எதிரொலிக்கும்’’ என் றார்.

அமைச்சர் உதயநிதி பிரச்சாரம்: தேனியில் ஏற்பாடுகள் தீவிரம்

தேனி, மார்ச் 22- ‘இந்தியா’ கூட்டணி சார்பில் தேனி மக்களவைத்  தொகுதி திமுக வேட்பா ளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து மார்ச் 23, 24  ஆகிய தேதிகளில் திமுக இளைஞரணி செயலாளர்  உதயநிதி ஸ்டாலின் பிரச்சா ரம் மேற்கொள்கிறார். ஆண்டிபட்டி நகரில் மார்ச் 23 ஆம் தேதி  அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் பிரச்சாரம் மேற் கொள்ளும் இடத்தினை  தெற்கு மாவட்டச் செயலாள ரும், கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான ராம கிருஷ்ணன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகா ராஜன் தலைமையில் ஏராள மான கட்சி நிர்வாகிகள் இடத்தை தேர்வு செய்தனர்.  மார்ச் 24 அன்று  தேனியில் நடைபெறும் நிகழ்ச்சியில் வாக்கு சேகரிக் கிறார். 

நவக்கிரக கோவில்களுக்கு ஏசி வசதியுடன்  கூடுதலாக ஒரு சிறப்பு பேருந்து இயக்கம் மேலாண் இயக்குநர் கே.எஸ்.மகேந்திரகுமார் தகவல்

கும்பகோணம், மார்ச் 22- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்தின் சார்பில் நவக்கிரக சிறப்பு சுற்றுலா பேருந்து பிப்.24 முதல் துவக்கப்பட்டு சிறப்பான முறையில் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.  இந்தப் பேருந்து பொதுமக்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றதையடுத்து, வயதானவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கிணங்க குளிர்சாதன வசதியுடன் மேலும் ஒரு சிறப்பு சுற்றுலா பேருந்து இயக்கப்பட உள்ளது. இப்பேருந்து மார்ச் 25 முதல் தினசரி காலை 5.15 மணிக்கு கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு, நவக்கிரக கோவில்களுக்கும் சென்று தரிசனம் முடித்து இரவு 8 மணியளவில் கும்பகோணம் பேருந்து நிலையம் வந்தடையும் வகையில் வாரத்தில் 7 நாட்களும் இயக்கப்படும்.  குளிர்சாதன வசதியுடன் கூடிய சிறப்பு சுற்றுலா பேருந்தில் நபர் ஒருவருக்கு ரூ.1350/- கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பயணம் செய்ய விருப்பம் உள்ள பயணிகள் www.tnstc.in என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து, தங்களது பயணச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம். இந்த நவக்கிரக பேருந்தில் பயணம் செய்ய, இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் மட்டுமே முன்பதிவு செய்து பயணச்சீட்டை பெற்றுக் கொள்ள இயலும். நேரடியாக பேருந்தில் பயணச் சீட்டு பெற்றுக் கொள்ள இயலாது என மேலாண் இயக்குநர் கே.எஸ்.மகேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

திமுக அணி மக்கள் மத்தியில் பலமாக உள்ளது அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

தூத்துக்குடி,மார்ச் 22- தூத்துக்குடி விமான நிலையத்தில் வியாழக்கிழமையன்று தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சட்டமன்ற தேர்தல் என்றால் என்ன?, நாடாளுமன்றத் தேர்தல் என்றால் என்ன வென்று தெரியாது. அவர் சட்டமன்றத் திற்கும், நாடாளுமன்றத்திற்கும் சென்றவர் அல்ல. எந்த நடவடிக்கையையும் கவ னித்தவரும் அல்ல.  10 ஆண்டு காலம் கேஸ், பெட்ரோல் விலையை உயர்த்தி இந்திய நாட்டில் உள்ள மக்கள் அத்தனை பேரையும் வஞ்சித்தது மோடி அரசு.  தற்போது இந்தியா கூட்டணியில் பெட்ரோல் விலை நேர் பாதியாக குறைப் போம் என்று சொல்லி இருக்கின்றோம். கேஸ் விலை 500 ரூபாய்க்கு கொண்டு வரப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருப்பது போன்று உரிமைத் தொகை இந்தியா முழுவதும் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும். இந்த அற்புத மான திட்டங்களை எல்லாம் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குறுதியாக அளித்துள் ளோம். இது கூட தெரியாமல் ஒருவர் கட்சி நடத்துகிறாரா?  இல்லை எப்போதுமே பேசவேண்டும் என்பதற்காக பொய்யை புழுகி விட்டுக் கொண்டிருக்கிறார்களா? என்பதே எங்களு டைய கேள்வி. திமுக அரசு மக்கள் மத்தியில் பலமாக ஊடுருவி உள்ளது. சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார். 75 சதவீதத்திற்கு மேல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம். இன்னும் சில திட்டங்கள், பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  இவ்வாறு அவர் கூறினார்.