இருப்பிடம் விட்டு இருப்பிடம் மாறி, கூடை முடையும் தொழிலில் ஈடு பட்டுள்ள தொழிலாளர்கள், போதிய வரு வாய் இல்லாததால் வேதனை அடைந்துள் ளனர். வீடுகளில் நாம் அன்றாடம் பயன் படுத்தக் கூடிய சோறு கொட்டும் கூடை, கோழி அடைக்கும் பஞ்சாரம், குழம்பு, சோறு மூட உதவும் ஈச்சங்கூடைகளை பார்த்திருக் கலாம். மேலும், காய்கறிக் கடைகளில், காய்கறி கொட்டி வைக்கும் தட்டு, பூஜைக் கூடைகள் ஆகியவற்றையும் பார்த்திருப் போம். இவை ஈஞ்சி மரத்தில் இருந்து செய்யப் படுகின்றன. இந்த ஈஞ்சி மரங்கள் கிழக்கு கடற்கரைச் சாலையில் சேதுபாவாசத்திரம் தொடங்கி, கட்டுமாவடி, மணமேல்குடி, அர சங்கரை உள்ளிட்ட தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட எல்லைகளில் விளைகிறது. சாதார ணமாக கருப்பு ஈச்சம் பழத்தை சிறு வயதில் சாப்பிட்டு இருப்போம். அந்த முள் நிறைந்த ஈஞ்சி மரத்திலிருந்து தான், இந்த கூடைகள் தயார் செய்யப்படுகின்றன. ஈஞ்சி மரத்தின் மட்டைகளை வெட்டி, கையை பதம் பார்க்கும் முள்ளைச் சீவி, அந்த ஈஞ்சி மட்டையின் தலைபாகத்தை வெட்டி அகற்றி விட்டு, மட்டையை பக்குவ மாக ஒரே அளவில், மூன்று, நான்காக கிழித்து காய வைத்து பக்குவப்படுத்தி, அது உலர்ந்து சரி பக்குவத்தில் வரும்போது இந்த ஈச்சங்கூடை உள்ளிட்ட கைவினைப் பொருட்களை தயார் செய்கின்றனர்.
போதிய வருமானம் இல்லை
இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள திருச்சி கல்லணை அருகே உள்ள நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி - மாரியம் மாள் தம்பதி கூறுகையில், “நாங்கள் பிழைப்புக்காக, திருச்சி மாவட்டத்தி லிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தூரம் கடந்து வந்து, இப்பகுதியில் உள்ள ஈஞ்சி மரங்க ளின் கிளைகளை வெட்டி இந்த ஈச்சங் கூடைகளை தயார் செய்யும் தொழிலில் ஈடு பட்டு வருகிறோம். வருடத்தில் ஒருமுறை மூன்று மாதங் களுக்கு, அதாவது ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இந்த ஈஞ்சி மரங்கள் நன்கு விளைந்து, கூடைகள் தயார் செய்யும் பக்குவம் நிலையில் இருக்கும். இவற்றை தேடி வெட்டி எடுத்து பக்குவப் படுத்தி, இந்த கூடை, பஞ்சாரம், தட்டுகளை தயார் செய்கிறோம். ஈஞ்சி செடிகளுக்குள் பாம்புகள், விஷ ஜந்துக்கள், விஷப்பூச்சிகள் நடமாட்டம் இருக் கும். உயிரை பணயம் வைத்துத்தான், வயிற்றுப் பிழைப்புக்காக இவற்றை வெட்டிக் கொண்டு வந்து, பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். ஒரு நாளைக்கு மூன்று கூடைகள் பின்னுவோம். மொத்தமாக கடைக்காரர் களுக்கு 200 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்வோம். கடைக்காரர்கள் தேடி வந்து அதிகளவில் வாங்கிச் செல்கின் றனர். அதே நேரத்தில், வெயில், மழை பார்க்காமல், தெருக்களில் எடுத்துச் சென்று ரூ.250 முதல் 300 வரை விற்பனை செய்து வருகிறோம். உழைப்புக் கூலி, தயாரிப்பு என நாளொன் றுக்கு செலவு போக, நபர் ஒன்றுக்கு ரூ.300 கிடைக்கும். இதனைக் கொண்டு தான் குடும்பம் நடத்துகிறோம். இதற்காக பிள்ளைகளை உறவினர்கள் பொறுப்பில், படிப்பதற்காக விட்டு விட்டு இடம் மாறி வந்து மூன்று மாதங்கள் தொழில் செய்வோம்” என்றனர்.
மானியம் வழங்க கோரிக்கை
அரசு எங்களைக் கண்டு கொள்வ தில்லை எனவும் வேதனை தெரிவித்தனர். மேலும், எங்களுக்கு மானியத்தில் தொழில் தொடங்க கடனுதவி செய்ய வேண்டும். எங்கள் தயாரிப்புகளை அரசே நல்ல விலை கொடுத்து கொள்முதல் செய்து, சந்தைப் படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிபிஎம் கோரிக்கை
இயற்கை பொருட்களில் தயாரிக்கப் படும் பொருட்களை சந்தைப்படுத்த அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். நாடோடி குற வர் இனத்தைச் சேர்ந்த இம்மக்களின் வாழ்வாதாரம் காத்திடவும், இவர்களின் வாழ்வு மேம்படவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் தெரிவித்துள்ளார். - எம்.எஸ்.ஜகுபர்அலி