districts

ஆர்டிபி கல்லூரியில் பேச்சுப் போட்டி

பாபநாசம், ஏப்.29-

   தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஆர்டிபி கல்லூரியில்  கல்லூரி மாண வர்களுக்கான பேச்சுப் போட்டி  நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆர்டிபி.  கல்லூரித் தலைவர் தாவூது பாட்சா தலைமை வகித்தார். போட்டி ஒருங் கிணைப்பாளர் செய்யது அகமது வரவேற்றார். பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா போட் டியை துவக்கி வைத்தார்.

  தஞ்சை மண்டலக் கல்லூரி கல்வி இணை இயக்குநர் எழிலன்,  காதர் மொய்தீன் கல்லூரி முன்னாள்  முதல்வர் அப்துல்காதர், ராஜகிரி தாவூத் பாட்சா கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் முகம்மது முகை தீன் வாழ்த்தினர். ஆர்டிபி கல்லூரி  துணை முதல்வர் தங்கமலர் நன்றி  கூறினார். இதில் தஞ்சை மாவட்டத் தில் உள்ள 48 கல்லூரிகளைச் சேர்ந்த  89 மாணவர்கள் பங்கேற்றனர்.