districts

img

உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை அமல்படுத்துக கட்டுமானத் தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், ஜூலை 18-

      கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மாத  ஓய்வூதியம் ரூ.2000 என உயர்த்தி அறிவித் ததை அமல்படுத்த வேண்டும். 60 வயது  நிறைவடைந்த நாள் முதல் ஓய்வூதியம்  வழங்க வேண்டும். பெண் தொழிலாளர் களுக்கு 55 வயது முதல் ஓய்வூதியம் வழங்க  வேண்டும். அதனை மாதந்தோறும் 10 ஆம் தேதிக்குள் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். கட்டு மானத் தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை கால சிறப்பு நிதி ரூ.5000, தரமான  வேட்டி, சேலை வழங்க வேண்டும். நலவாரி யத்தில் நேரடிப் பதிவை அனுமதிக்க வேண்டும்.

    ஓய்வூதியம் பெறும் தொழிலாளி இறந்து  விட்டால், அவரது குடும்பத்திற்கு இயற்கை  மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை  வழங்க வேண்டும். பணிபுரியும் போது நடை பெறும் விபத்துகளால் கை, கால், எலும்பு முறிவு ஏற்படும் தொழிலாளியை, தமிழக முதல்வர் காப்பீட்டு திட்டத்திலும், இஎஸ்ஐ திட்டத்திலும் இணைத்திட வேண்டும். கட்டு மானத் தொழிலாளர் நலவாரிய ஆணை  எண்.35, 36 மற்றும் 37 ஆகிய பரிந்துரை களை உடனடியாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலி யுறுத்தி கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தி னர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

     நாகப்பட்டினம் தொழிலாளர் நலவாரிய  அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ்.சந்தான கிருஷ்ணன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.தங்கமணி, மாவட்டத் தலைவர் ஏ.சிவனருட்செல்வன், மாவட்டப் பொருளாளர் என்.வெற்றிவேல், மாவட்டத் துணைத் தலைவர் பி.செல்வராஜ் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் உரை யாற்றினர்.

 திருச்சிராப்பள்ளி

      சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்கத் தின் திருச்சி மாநகர மாவட்டக் குழு சார்பில்  மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்டுமான சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்டச் செய லாளர் ரெங்கராஜன், மாவட்டத் தலைவர் சீனி வாசன், மாநிலக்குழு உறுப்பினர் செல்வி ஆகியோர் பேசினர்.

அரியலூர்

     அரியலூரில் உள்ள தொழிலாளர் நல வாரியம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்டச் செயலாளர் துரைசாமி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலை வர் கே.கிருஷ்ணன், மாவட்டத் துணைத் தலைவர்கள் கண்டன உரையாற்றினர். இதில் 500-க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.  

திருவாருர்

     திருவாரூர் மாவட்டத் தொழிலாளர் துறை ஆணையர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலை வர் நடராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ரமேந்திரன் முன்னிலை  வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், மாவட்டத் தலைவர் என்.அனிபா, சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் பிரேமா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கரூர்

       சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில், கரூர் வெண்ணெய்மலையில் உள்ள  நலவாரிய அலுவலகம் முன்பு கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ப.சர வணன், சிஐடியு மாவட்டத் தலைவர் ஜீ.ஜீவா னந்தம், மாவட்டச் செயலாளர் சி.முருகே சன், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் சி.ஆர்.ராஜாமுகமது ஆகியோர் கண்டன உரையாற்றினர். தையல் சங்க கௌரவ தலைவர் ஹோச்சுமின், கட்டுமான சங்க மாவட்ட துணைத் தலைவர்கள் பலர் கலந்து  கொண்டனர்.