மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வாணாதிராஜபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த க.ஜெயவசந்தன் (வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி) மாணவன், சென்னை அடையாறு புனித லூயிஸ் காது கேளாதோர் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். இவர் கல்லூரி கல்விக் கட்டணம் ரூ.23,500 கேட்டு மாவட்ட ஆட்சியர் இரா.லலிதாவிடம் மனு அளித்தார். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், தன் விருப்ப நிதியிலிருந்து உடனடியாக கல்விக் கட்டணம் வழங்கப்படும் என உறுதியளித்தார்.