பொன்னமராவதி, ஜூலை 3-
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க பொன்னமராவதி வட்டக்கிளை பேரவை புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
வட்டத் தலைவர் ராமன் தலைமை வகித்தார். வட்ட இணைச்செயலாளர் செந்தில்நாதன் வரவேற்றார். மாவட்டத் தலைவர் முத்தையா, மாவட்டச் செயலாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். புதிய தலைவராக இராமன், செயலாளராக குணசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில், அனைத்து ஓய்வூதியர்களுக்கும் கட்ட ணம் இல்லா பயணச் சலுகை, மருத்துவ சேவை வழங்க வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வர வேண்டும். பொன்னமராவதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உருவாக்கப்பட வேண்டும். பொன்னமராவதி அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.