திருச்சிராப்பள்ளி, அக்.17 - திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கணினி கோடிங் இலவச பயிற்சி மாவட்ட மைய நூலகத்தில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மாணவர்கள் அக்.27 ஆம் தேதிக்குள் பெற்றோரு டன் வந்து பதிவு செய்து கொள்ளலாம். பெற்றோருடன் மட்டுமே பயிற்சிக்கு வர வேண்டும். பயிற்சிக்கு உதவ கணினி தெரிந்த தன்னார்வலர்கள் வரலாம். கூடுதல் விவரங்களுக்கு 63836 90730 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட மைய நூலகர் தனலட்சுமி தெரிவித்துள்ளார்.