பொன்னமராவதி, ஜூன் 11-
புதுக்கோட்டை மாவட் டம் பொன்னமராவதி அருகே உள்ள சுந்தர சோழபுரம் கீழப்பட்டி சண் முகம் மனைவி பாக்கிய லட்சுமி-( 37) இவர் பொன்னமராவதி பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றுள் ளார். அப்போது ஒருவர் பணம் எடுத்துத் தருவ தாக கூறி பணத்தை எடுத்துச் சென்றுவிட் டார்.
ஏடிஎம் கார்டையும் மாற்றிக் கொடுத்து விட்டுச் சென்றுள்ளார். இது குறித்து பொன்ன மராவதி காவல்துறையி னர் விசாரணை நடத்தி மதுரை மாவட்டம் பால மேடு நாயக்கர் தெருவை சேர்ந்த வெங்கடசாமி மகன் சரவணகுமார்-(31) என்பவரைக் கைது செய்து அவரிடமிருந்த ரூ.18 ஆயிரத்தை மீட்ட னர். தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்ற னர்.