districts

புதிய விதை சேமிப்பு  கிடங்கிற்கு அடிக்கல்

 மயிலாடுதுறை, டிச.7 -  மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறை சார்பில் துணை வேளாண்மை விரிவாக்கம் மைய விதை சேமிப்பு கிடங்கு ரூ.40 லட்சம் மதிப்பீட்டில்  கட்டப்பட உள்ளது. புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதனன்று வேளாண்மை உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப் பினர் நிவேதா எம்.முருகன் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி  வைத்தார்.