தஞ்சாவூர், டிச.23- தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், புதனன்று தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறைச் சார்பில் ‘‘தென்னை விஞ்ஞானி வா.செ.செல்வம்’’அறக்கட்டளைத் தொடக்கவிழா நடைபெற்றது. விழாவிற்கு பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில், தென்னை விஞ்ஞானி வா.செ.செல்வம் அறக்கட்டளை நிறு வப்படுவதன் நோக்கமானது. இது காலத்தின் குரலாகவும், அறிவியல் சாரமாகவும் திகழும் தமிழ் இலக்கியப் படைப்புகள், இன்றைய நவீன வாழ்வியலுக்கான தரவுகளையும் அளித்து வரு கின்றன. இதுவே இளந்தலைமுறையினரிடம் கொண்டு செல்லுவது அடிப்படை நோக்கமாகும். படைப்பிலக்கியத் துறையில் காலத்திற்கேற்ற படைப்பாக்கங்களை நல்கி வரும்படைப்பாளி ஒருவரை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து அவருக்கு அறக்கட்டளையின் வட்டித்தொகையில் இருந்து ரூ,10 ஆயிரம் வழங்கப்படும்.
பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்க ளின் கல்வி சார் செயல்பாடுகளுக்குத் துணை நிற்கும் வகையிலான உரைகள் மற்றும் ஆய்வு அரங்கத்தினை நடத்துதல், மாணவர்களின் படைப்பாக்கத்திறனை வளர்க்கும் வகையிலான போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கப்படும் என்றார். முன்னதாக அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித் துறை இணைப்பேராசிரியர் முனைவர் ஞா.பழனிவேலு வரவேற்றார். வளர் தமிழ்ப் புல முதன்மையர், முனைவர்கு.சின்னப்பன் தொடக்கவுரை ஆற்றினார்.அயல்நாட்டு தமிழ்க் கல்வித் துறை துறைத்தலைவர் முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன் அறக்கட்டளையின் செயல் பாடு நோக்கம் பற்றி உரையாற்றினார். சிலம்பு நம்பி.இளவரசு அமிழ்தன் வாழ்த்துரை வழங்கினார். கண்ணதாசனின் கவிதைக் கோலங்கள் என்ற தலைப்பில் தமிழ்ச்செம்மல் புலவர்ஆதி நெடுஞ்செழியன் இலக்கியவுரை ஆற்றினார். தென்னை விஞ்ஞானி டாக்டர் வா.செ.செல்வம், திருவையாறு, கோகோஸ் தொழிலகம் ஏற்புரை வழங்கினார். உதவிப் பேராசிரியர்முனைவர் தெ.வெற்றிச்செல்வன் நன்றி கூறினார். நிகழ்ச்சி யில் பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், மாணவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.