தஞ்சாவூர், டிச. 1- தஞ்சையில் மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இயற்கை பேரிடர்களின் போது தடை யின்றி மின்சாரம் கிடைக்க பாடுபட்டு வரும் மின் ஊழியர்களுக்கு கடந்த சில ஆண்டு களாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் பல ஆயிரக்கணக்கான மின் ஊழி யர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தமிழக அரசு மின்வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்கிட வேண்டும். ஆரம்ப கட்ட காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். விருப்ப ஊர்மாறுதல் உத்தரவுகளை உடனடி யாக வழங்கிட வேண்டும். தடையின்றி மின்சாரம் வழங்கிட தேவை யான தளவாடப் பொருட்களை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தஞ்சாவூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வாயி லில் செவ்வாய்க்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. பொறியாளர் சங்க மாநில துணை தலை வர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத் தலைவர் எஸ்.ராஜாராமன், சம்மே ளன சங்க மாநில துணைத் தலைவர் தங்க வேல், ஐக்கிய சங்க மாநில நிர்வாகி ராகவன், பொறியாளர் கழக மாவட்ட செயலாளர் மகா லிங்கம், ஐஎன்டியூசி சங்க நிர்வாகி பால்ராஜ், எம்ப்ளாயீஸ் பெடரேஷன் நிர்வாகி மோகன் தாஸ், மத்திய அமைப்பு நிர்வாகிகள் உரை யாற்றினர்.