districts

img

தேர்தல் பத்திரம்: பாஜகவை ஆதரிப்பதா?

திருவாரூர், மார்ச் 7 - தேர்தல் பத்திர விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி, தேர்தல் பத்திரம் பெற்றவர்கள் பட்டியலை வெளியிடாத ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் நடவடிக்கையை கண்டித்து திருவாரூர் நகர வங்கி கிளை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய, நகரக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜி.ரகுராமன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.கோமதி, மாவட்டக் குழு உறுப்பினர் என்.இடும்பையன், நகரச் செயலாளர் எம்.தர்மலிங்கம், ஒன்றிய (பொ) செயலாளர் ஜி.பவுன்ராஜ், வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.கே.வேலவன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பா.ஆனந்த் மற்றும் ஒன்றிய, நகரக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.