districts

img

ஒருங்கிணைப்பு இல்லாததால் பாதாளச் சாக்கடை பணிகளில் தொய்வு

திருச்சிராப்பள்ளி, ஜூன் 4-

     திருச்சிராப்பள்ளியில் பூமிக்கடியில்  வடிகால் அமைப்புப் பணிகள் நடை பெறுவதில் அரசுத் துறைகளுக் கிடையே ஒருங்கிணைப்பு இல்லாத தால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

     திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஏறக் குறைய ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு  ஒரே நேரத்தில் இரண்டு பாதாளச் சாக்கடைத் திட்டங்களைத் தொடங்கிய பிறகு, பிரதான வடிகால்கள் கட்டுவ தற்காகவும், மேன்ஹோல்கள்  அமைப் பதற்காகவும் நகரத்தில் உள்ள சாலைகள் தோண்டப்பட்டுள்ளன.  

   பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் மற்றும்  தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங் களின் கேபிள்கள், குடிநீர் விநியோகத் திற்கென அமைக்கப்பட்டுள்ள பிரதான குழய்கள், மின்சார கேபிள்கள் உள் ளிட்டவை  பூமிக்கடியில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

   வடிகால் அமைப்புப் பணிகளை  நிறைவேற்றுவதில் துறைகளுக்கு இடையே சரியான புரிதல் இல்லை  என்று பகுதிவாசிகள் புகார் கூறு கின்றனர். பாதாளச் சாக்கடைப் பணியை எடுத்துள்ள ஒப்பந்ததாரர் களால் பணியமர்த்தப்பட்ட தொழிலா ளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் நிலத்தடி சேவைகள் பற்றி சரியான  புரிதல் இல்லை. குறிப்பாக கருமண்ட பம் பகுதியில் பாதாளச்சாக்கடைப் பணிக் காக சாலைகளை தோண்டும்போது நிலத்தடி கட்டமைப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து அறியாமல், தொழிலாளர்கள் அடிக்கடி பூமிக்கடி யில் செல்லும் கேபிள்களை சேதப்படுத் துகின்றனர்.

    சுமார் 1,500 தொலைபேசிகளைக் கட்டுப்படுத்தும் மூன்று தொலைபேசித்  தூண்கள், சமீபத்தில் சாலைகளைத்  தோண்டும் போது மண் அள்ளும் இயந் திரத்தால் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது, இதனால் பெரும்பா லான தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதேபோல், பல பகுதிகளில் திறந்தவெளி வாய்க்கால் களும், மழைநீர் வடிகால்களும் சேத மடைந்துள்ளன.

   பாதாளச்சாக்கடைப் பணியை மேற்கொண்டுள்ளவர்கள் தங்கள் விருப்பப்படி  வேலையைச் செய்கிறார் கள். சிலரைத் தவிர, அவர்களுக்கு நிலத்தடி சேவை உள்கட்டமைப்பு பற்றி  போதுமான புரிதல் இல்லை.

   உள்கட்டமைப்புகளைப் பாது காப்பதில் சம்மந்தப்பட்ட துறைகளின் மேற்பார்வையாளர்களும் அதிகாரி களும் முனைப்பு காட்டவில்லை என் கிறார் கருமண்டபத்தைச் சேர்ந்த இ. முஹமது அலி.

   தொலைபேசி இணைப்புகள் கடந்த  நான்கு மாதங்களாக செயல்பட வில்லை. ஆனால் வாடிக்கையாளர்கள் இணைப்புகளுக்கான பணத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். இணைப்பு களைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வில்லை. துறைகளின் ஒருங்கிணைப்பு இல்லாததால் மக்கள் அவதிக்கு ஆளாகக் கூடாது. பாதாளச்சாக்கடைப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உட னிருக்க வேண்டும். இது பூமிக்கடியில் பொருத்தப்பட்ட கேபிள்கள் சேதமடை வதை தடுக்கும் என்றும் அவர் கூறினார்.