மயிலாடுதுறை, ஜூலை 23 -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மயிலாடுதுறை மாவட்டம் குத்தா லம் ஒன்றியம், வழுவூர் நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ்.கருணாநிதி. திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் வெள்ளிக் கிழமை காலமானார். அவருக்கு வயது 68.
இவர் தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகத்தில் 35 ஆண்டுகள் பணியாற்றி யுள்ளார். மயிலாடுதுறை நகரத்தில் பொது மக்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இடையூறாக இருந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி நடத்திய போராட்டத்தில் பங்கேற்றதால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் 32 நாட்கள் இருந்தார்.
மணிப்பூர் பிரச்சனை சம்பந்தமாக வெள்ளிக்கிழமை மாலை கட்சியின் சார்பில் மயிலாடுதுறையில் போராட்டம் நடை பெற இருந்தது. இதில் கலந்து கொள்வ தற்காக வீட்டிலிருந்து கிளம்பிய போது, திடீரென உடல்நலக்குறை ஏற்பட்டது. பின்னர் மருத்துவமனைக்கு அழைத் துச் செல்லப்பட்ட அவர் சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார்.
தகவலறிந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், ஒன்றியச் செயலாளர் சி.விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள், போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர்கள், வாலிபர், மாதர், மாணவர் சங்கத்தின் நிர்வா கிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.