திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம், அம்மையப்பன், அக்கரை காலனி தெருவில் வசித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் வடிவேல் சனிக்கிழமை மாலை காலமானார். அவருக்கு வயது 84.
தோழர் வடிவேலுவின் மறைவு செய்தி அறிந்த கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர் ஆகியோர், அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளர் டி.ஜெய பால், மாவட்டக் குழு உறுப்பினர் கே.சீனிவாசன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.