சிஐடியு பயிற்சி முகாம்
திருச்சிராப்பள்ளி, நவ.21- சிஐடியு திருச்சி மாநகர் தொழிற்சங்க பயிற்சி முகாம் செவ்வா யன்று திருச்சியில் நடந்தது. பயிற்சி முகா மிற்கு சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் சீனி வாசன் தலைமை வகித் தார். ‘நவீன அடிமைத்தன மும், வர்க்க அணி திரட்ட லும்’ என்ற தலைப்பில் மாநிலச் செயலாளர் திரு வேட்டை பேசினார். மாவட்டக் குழு முடிவு கள் குறித்து மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் பேசினார். இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள், இணைக் கப்பட்ட சங்கங்களின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் செல்வி வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் மணிகண்டன் நன்றி கூறி னார்.
போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
தஞ்சாவூர், நவ.21- தஞ்சாவூர் இந்திய குழந்தைகள் நலச் சங்கம் மாணவர் இல்லத்தில் பயிலும் மாணவர்கள், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற சான்றி தழ்களை, மாவட்ட ஆட்சி யர் அலுவலக கூட்ட ரங்கில், மாவட்ட ஆட்சி யர் தீபக் ஜேக்கப்பிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். தஞ்சாவூர், இந்திய குழந்தைகள் நலச் சங்கம் மாணவர் இல்லத் தில் பயிலும் மாணவர் கள், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை நடத்திய கலா உற்சவம், தனிநபர் நாட்டுப்புற நட னப் போட்டியில் மாண வர் ப.பிரவீன் பங்கேற்று, மாநில அளவில் மூன்றாம் பரிசையும், கலைபண்பாட்டுத் துறை நடத்திய மாநில கலைப் போட்டியில், தனிநபர் கிராமிய நடனப் போட்டி யில் மாணவர் ம.பால முருகன், மாநில அள வில் இரண்டாம் பரிசும் பெற்றதை, இல்லத் தலைவரும், மாவட்ட ஆட்சியருமான தீபக் ஜேக்கப்பிடம் காண் பித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்ச்சியில் மாணவர் இல்ல கௌர வச் செயலாளர் ஆர்.ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விபத்தில் இளைஞர் பலி
தஞ்சாவூர், நவ.21 - தஞ்சாவூர் அருகே கத்திரிநத்தம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன் (35). இவர் நாஞ்சிக்கோட்டை சாலை யிலுள்ள ஆவின் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டு நராக பணியாற்றி வந்தார். இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு பணி முடித்துவிட்டு, ஆவின் நிறுவனத்திலிருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தஞ்சாவூர் அருகே பட்டுக்கோட்டை புறவழிச்சாலை பாலத் தில் சென்ற இவர் மீது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால், படுகாய மடைந்த மகேந்திரன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரி ழந்தார். இதுகுறித்து, தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தி னர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் போராட்டம்
திருச்சிராப்பள்ளி, நவ.21 - திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம் வெங்கட்ரமண சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்களில், சாகுபடி செய்து வரும் குத்தகை விவசாயிகளை காலி செய்ய வலியுறுத்திய இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்தி ருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலு வலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு சங்க மாவட்ட செய லாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாவட்ட தலைவர் கே.சி.பாண்டியன், மாவட்ட பொரு ளாளர் தனபால், சிபிஎம் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா ஆகியோர் பேசினர். பின்னர் நடந்த அமைதி பேச்சுவார்த்தை யில் உடன்பாடு ஏற்பட்டதால் அனைவரும் கலைந்து சென்ற னர்.
நவ.23,24-இல் தஞ்சை மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கம்
தஞ்சாவூர், நவ.21 - முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனொரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் “நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர் களை ஈர்த்தது” என்ற தலைப்பின்கீழ் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. நவம்பர் 23 (வியாழன்) அன்று காலை 10 மணியளவில் நாச்சி யார்கோவில் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியிலும், நண்பகல் 12 மணியளவில் கும்பகோணம், இதயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் பிற்பகல் 3 மணியள வில் பாபநாசம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியிலும் நடைபெறும். அதேபோன்று நவ.24 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 9.30 மணியள வில் தஞ்சாவூர் பாரத் கலை மற்றும் அறி வியல் கல்லூரியிலும், நண்பகல் 12 மணியளவில் பட்டுக்கோட்டை, கரம்பயம் மீனாட்சி சந்திரசேகரன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், பிற்பகல் 3 மணியளவில் பட்டுக் கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிகளிலும் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சி யர், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவ லர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாண வியர் கலந்து கொள்கின்றனர் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரி வித்துள்ளார்.
சிறுமியின் படம் தவறாக சித்தரிப்பு: போக்சோவில் இளைஞர் கைது
அரியலூர், நவ.21- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உத்திரக்குடி கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (23). இவர் 16 வயது சிறுமி ஒருவரின் கண் களை பேஸ்புக், முகநூல், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தவறாக பதிவு செய்துள்ளார். இதுகுறித்து நவநீதகிருஷ்ணன் பெற்றோ ரிடம், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கூறி கண்டித்துள்ளனர். இதை மனதில் வைத்துக் கொண்ட நவநீதகிருஷ்ணன், மீண்டும் அந்த சிறுமியின் பெயரை, தன்னு டைய பெயருடன் சேர்த்து சமூக வலை தளத்தில் குரூப் ஒன்றை துவக்கியுள்ளார். இதில் அச்சிறுமியின் புகைப்படத்தை, தன்னு டைய புகைப்படத்துடன் இணைத்து குரூப்பில் போட்டுள்ளார். இதைத் தெரிந்து கொண்ட அச்சிறுமி, பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். மேலும், நவநீதகிருஷ்ணனின் பெற்றோரிடம் மகனை கண்டிக்குமாறு, சிறுமியின் பெற்றோர் அறிவுறுத்தி உள்ளனர். மீண்டும் இது தொடர்ந்தால் போலீசில் புகார் கொடுப்போம் எனவும் கூறியுள்ளனர். இதனால் ஆத்திர மடைந்த நவநீதகிருஷ்ணன், சிறுமியின் பெற் றோரை பொது வெளியில் வைத்து, மிக ஆபாசமாகவும், தகாத வார்த்தைகளாலும் திட்டியுள்ளார். செய்வதறியாத சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சுமதி தலைமையிலான போலீசார், நவநீத கிருஷ்ணனை அழைத்து விசாரித்து, அவரது செல்போன் பதிவுகளை உறுதி செய்தனர். பின்னர் அவர் மீது வழக்குப் பதிந்து போக்சோ வில் கைது செய்தனர்.
கூட்டுறவுத் தேர்தலை நடத்துவதில் தயக்கமில்லை
கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை நடத்துவதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்றார் மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன். புதுக்கோட்டையில் திங்கள் கிழமை இரவு அவர் செய்தியாளர்கள் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜனநாயகத்தைக் காப்பதில் திமுக அரசு என்றும் தயங்கிய தில்லை. கடந்த ஆட்சியில் தவணை முறையில் தேர்தலை நடத்தினார்கள். கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்து வதில் எந்த தயக்கமும் எங்களுக்கு இல்லை. கூட்டுறவுச் சங்க உறுப்பினர் கள் பட்டியலில் பல்வேறு குளறுபடி கள் உள்ளன. எல்லோரின் விருப்பப் படியே தேர்தல் நடத்தப்படும். வாக்காளர் பட்டியலை சரி செய்த பின் கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்தப் படும். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப் பட்ட கூட்டுறவு சங்க பிரதிநிதிகளின் பதவிக் காலம் முடிந்து ஒரு மாதம்தான் ஆகிறது. இன்னும் 170 சங்கங்களுக்கு ஜனவரி மாதம் வரை பதவிக் காலம் உள்ளது. தமிழகத்தில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு ஒன்றிய அரசுதான் காரணம். ஒன்றிய அரசு போதிய அளவில் மண்ணெண்ணெய் வழங்காததால் தான் இந்தத் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஜெகதாப்பட்டினத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்ல கோரிக்கை
அறந்தாங்கி, நவ.21 - ஜெகதாப்பட்டினத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜெகதாப்பட்டினம் கிளை யில் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் பொதுக்குழு நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் குலாம்பாட்ஷா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் முஹம்மது மீரான் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். இதில் கிளைத் தலைவராக அப்பாஸ்கான், செயலா ளராக முகமதுகாசிம், பொருளாளராக அன்வர்அலி, துணைத் தலைவராக அயூப்கான், துணைச் செயலாள ராக ரஹ்மத்துல்லாஹ்கான், மாணவரணி செயலாளராக ரில்வான்கான், மருத்துவ அணி செயலாளராக அபு தாஹீர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஜெகதாப்பட்டினம் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்ட வேண்டும். வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். மழை நேரங்களில் நோய் பரவுவதை தடுக்க வீடுகள் தோறும் நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
15 குரங்குகள் பிடிபட்டன
பாபநாசம், நவ.21 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி கூடலூர், புத்தூர் உள்ளிட்ட பகுதி களில் ஏராளமான குரங்குகள் சுற்றித் திரிந்தன. இவை பொது மக்களுக்கு இடையூறு செய்ததுடன், விவசாயப் பயிர்களையும் சேதப்படுத்தின. இதுகுறித்து கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சித் தலைவர் ஜெய்சங்கர், தஞ்சை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் கூடலூரில் வைக்கப்பட்ட கூண்டில், 15 குரங்குகள் பிடி பட்டன. இந்த 15 குரங்குகளும் வனப்பகுதியில் விடப்பட்டன.
மீனவர் தினம்: விழிப்புணர்வு கூட்டம்
அறந்தாங்கி, நவ.21 - உலக மீனவர் தினத்தை முன்னிட்டு, இந்திய கடலோர காவல்படை, தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் மீன்வளத்துறை ஆகியோர் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மற்றும் தெற்கு புதுக்குடி ஆகிய இடங்களில் கூட்டு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்லக் கூடாது. தடை செய்யப்பட்ட வலைகளை பயன் படுத்தி மீன் பிடிக்க கூடாது. கடத்தல் மற்றும் சந்தேக நபர் கள் தொடர்பான தகவல்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும். கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும்போது தேவையான பாதுகாப்பு உபகரணங்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில், இந்திய கடலோர காவல் படையைச் சேர்ந்த வினு பிரதான அதிகாரி தலைமையில் ஐந்து பேரும், கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் முத்துக் கண்ணு, சிறப்பு உதவி ஆய்வாளர் வீராச்சாமி, மீன்வளத் துறை ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர்.
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி
தஞ்சாவூர், நவ.21 - தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டத்தின் மூலமாக வருடத்தில் 2 முறை (மார்ச் மற்றும் செப்டம்பர்) பசு மற்றும் எருமை மாடுகளுக்கு 100 சதவீத மானியத்தில் கோமாரி நோய்த் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டம் சொர்ணக் காடு ஊராட்சியில் உள்ள 75-க்கும் மேற்பட்ட கால்நடை களுக்குக் கோமாரி நோய்த் தடுப்பு ஊசி செலுத்தப்பட் டது. முன்னதாக சாணாகரை கால்நடை உதவி மருத்து வர் விஜயகுமார் கிராம மக்களிடம் பேசினார். ஊராட்சி தலைவர் விஜயகுமார், கால்நடை உதவியாளர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். பாபநாசம் மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி, சாத்தனூ ரில் நடந்த கால்நடை விழிப்புணர்வு முகாமில் கால்நடை களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவர் பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நோய் தாக்குதல் இன்றி சம்பா பயிரில் நல்ல மகசூல்: வேளாண்துறை ஆலோசனை
தஞ்சாவூர், நவ.21 - காவிரி பாசனப் பகுதியில், சம்பா பருவத்தில் ஒரு போகமாக நெல் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சம்பா பருவத்தில் சரியான வழிமுறைகளை பின்பற்றினால் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இன்றி, எதிர்பார்க்கும் மகசூல் எளிதில் கிடைக்கும். இதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நீண்ட கால சம்பா ரகங்களான ஆடுதுறை - 51, சி.ஆர்.1009 என்கிற சாவித்திரி, சி.ஆர். சப் -1 போன்ற ரகங்கள் நேரடி விதைப்பிற்கும், நாற்று விட்டு நடவு செய்வதற்கும் ஏற்ற ரகங்கள். ஒரு ஏக்கர் நடவு செய்ய 8 செண்டு நாற்றங்கால் (320 சதுர மீட்டர்) தேவை. இதற்கு 24 கிலோ விதை போதுமானது. குறைவான தண்ணீர் நிறுத்தி நாற்றங்காலில் முளைவிட்ட விதைகளை விதைப்பு செய்ய வேண்டும். 24 மணி நேரம் கழித்து தண்ணீரை வடிக்க வேண்டும். 5 நாட்கள் வரை நாற்றங்கால் காய்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் நாற்றின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு 1.5 செ.மீ முதல் 2.5 செ.மீ வரை நீரை கட்டலாம். 8 செண்டு நாற்றங்காலுக்கு 400 கிலோ தொழுஉரம் இட வேண்டும். நாற்றுகளை 25 நாட்களுக்குள் பறிக்கக்கூடிய இடங்களில் 16 கிலோ டி.ஏ.பி.உரத்தை அடியுரமாக இட வேண்டும். அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, அசோபாஸ், பொட்டாஷ் பாக்டீரியா தலா 100 மிலி வீதம் கலந்து நாற்றின் வேர்களை நனைத்து நடுவதால், நடவு வயலில் நாற்றுகள் உடனடியாக ஏற்றுக்கொண்டு பசுமையாக வளர உதவும். மண் மாதிரி ஆய்வு செய்து உரமிடுவது உரச்செலவை குறைக்கும். மண் ஆய்வு செய்யப்படாத இடங்களில் பொது பரிந்துரையாக ஏக்கருக்கு தழைச்சத்து 60 கிலோ, மணிச்சத்து 20 கிலோ, சாம்பல் சத்து 20 கிலோ வீதம் இட வேண்டும். இதில் தழைச் சத்தினை 5 பாகங்களாக பிரித்து அடியுரமாக ஒரு பங்கு, மேலுரமாக 4 முறை இட வேண்டும். மணிச்சத்து முழுவதையும் அடியுரமாக இட வேண்டும். சாம்பல் சத்தினை பிரித்து ஒரு பங்கு அடியுரமாகவும், ஒரு பங்கினை இரண்டாவது மேலுரத்துடன் யூரியாவுடன் கலந்து இட வேண்டும். அறுவடைக்கு 3 நாட்களுக்கு முன்பாக நெல் தரிசில் உளுந்து மற்றும் பச்சைப்பயறு விதைப்பு மேற்கொண்டு மண் வளத்தை கூட்டுவதுடன், கூடுதல் வருமானம் பெறலாம் என்று தஞ்சாவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அய்யம்பெருமாள் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மீது வழக்கு
நாகர்கோவில், நவ. 21 குமரி மாவட்டம், தக்கலை அருகே திக்கணங்கோடு சந்திப்பில் இருந்து பூக்கடை வரை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. ஊர்வல நிறைவில் பூக்கடை அருகே பொதுக்கூட்டம் நடத்தினர். காவல்துறையினர் அனுமதித்த குறிப்பிட்ட நேரத்தை விட தொடர்ந்து அதிக கூட்டத்தை கூட்டி பொது மக்களுக்கு தொல்லை கொடுத்ததாக பூதப்பாண்டி காவல் ஆய்வாளர் முத்துராஜ் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தக்கலை காவல் ஆய்வாளர் ராம சந்திரன், ஆர்.எஸ்.எஸ். மண்டல பொறுப்பாளர் விசு மற்றும் மதுரை பகுதியை சேர்ந்த தென்மண்டல தலைவர் வன்னியநாதன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.