போராட்டம் நிறைவு
கரூர், ஜூன் 26 - அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் உண் ணாவிரதப் போராட் டத்தை சிஐடியு மாவட் டத் தலைவர் பழச்சாறு கொடுத்து முடித்து வைத் தார். அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் தமிழ கம் முழுவதும் நூறு மை யங்களில் நடத்திய 24 மணி நேர உண்ணா விரதப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, கரூர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு சம்மே ளன மாநில துணைத் தலைவர் வி.பாலசுப்பிர மணியன் தலைமையில் போராட்டம் நடை பெற்றது. இதில் சிஐ டியு கரூர் மாவட்டத் தலை வர் ஜி.ஜீவானந்தம் சிறப்புரையாற்றி அனை வருக்கும் பழச்சாறு கொடுத்து உண்ணா விரதப் போராட்டத்தை முடித்து வைத்தார்.
நாளை எரிவாயு குறைதீர் கூட்டம்
கரூர், ஜூன் 26 - கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரி வாயு நுகர்வோர்களுக் கும் மறு நிரப்பு எரிவாயு உருளைகள் வழங்கு வதில் காணப்படும் குறை கள், நுகர்வோர்கள் பதிவு செய்த குறைகளின் மீது முகவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை கள் தொடர்பாக வரப் பெறும் புகார்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு, கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்ட அரங்கில் ஜூன் 28 அன்று மாலை 4 மணியளவில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. கரூர் மாவட்டத்திற்குட் பட்ட அனைத்து எண் ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரி வாயு ஒருங்கிணைப்பா ளர்கள் மற்றும் எரிவாயு வாடிக்கை யாளர்களு டன் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித் துள்ளார்.
அரசுப் பள்ளிக்கு நன்கொடை
தஞ்சாவூர், ஜூன் 26- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே ஆண்டிக்கச்சல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பயன்பாட்டுக்கு, பள்ளியின் முன்னாள் மாணவர் கா.சாய்சர ணின் பெற்றோர் செ. கார்த்திக், கா.ராஜாத்தி ஆகியோர் ரூ.4,000 மதிப் புள்ள மேஜையை பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கினர். அவர்க ளுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் அன்புமேரி, பள்ளி மேலாண்மை குழு தலைவி நா.பரிமளா, ஆசிரியர் நீலகண்டன் ஆகியோர் நன்றி தெரி வித்தனர்.
மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
அறந்தாங்கி, ஜூன் 26 - புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலை அடுத்த பெரு நாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை கணினி அறி வியல் பாடப் பிரிவிற்கு மாணவர் சேர்க்கை 2 ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய் வில் தேர்வு பெற்ற வர்களுக்கு சேர்க்கை ஆணையை கல்லூரி முதல்வர் பேரா.வீ.பால முருகன் வழங்கினார்.
குடிநீர் குழாய் பதிக்கும் பணி முடியும் வரை வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல நடவடிக்கை தேவை
சிபிஎம் கோரிக்கை பொன்னமராவதி, ஜூன் 26 - புதுக்கோட்டை மாவட் டம் பொன்னமராவதி முக்கிய கடைவீதியான அண்ணா சாலையில் நடை பெறும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணி முடிந்து, சாலை அமைக்கும் வரை நான்கு சக்கர, கனரக வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண் டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக கட்சி யின் ஒன்றியச் செயலாளர் பக்ருதீன், பொன்னமராவதி காவல் ஆய்வாளரிடம் அளித் துள்ள மனுவில், “பொன்னமராவதியின் முக்கிய வணிகப் பகுதி யான அண்ணா சாலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வரு கிறது. இதனால் அண்ணா சாலை முழுவதும், மண் சாலையாக காட்சியளிக் கிறது. இதில் கனரக வாக னங்கள் செல்லும் போது, பெரும் புழுதி எழுகிறது. இதனால் பொதுமக்கள் சுவாசிப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதிலிருந்து வர்த்த கர்கள், பொதுமக்களை பாதுகாக்க காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கப்பட்டு முழுவதுமாக தார்ச் சாலை அமைக்கும் வரை, நான்கு சக்கர வாக னங்கள் மாற்றுப் பாதையில் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மானியத்தில் எண்ணெய் பனை சாகுபடி செய்ய அழைப்பு
மானியத்தில் எண்ணெய் பனை சாகுபடி செய்ய அழைப்பு தஞ்சாவூர், ஜூன் 26- அரசு மானியத்தில் விவசாயிகள் எண்ணெய் பனை சாகுபடி செய்யலாம் என்று ஒரத்தநாடு தோட்டக்கலை உதவி இயக்கு நர் கூறியுள்ளார். இதுகுறித்து ஒரத்தநாடு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் சாந்திபிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “உள்நாட்டில் எண்ணெய் பனை சாகுபடியை ஊக்குவிக்க ஒன்றிய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில், தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, திரு வோணம், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், அம்மாபேட்டை, பாபநா சம், திருவையாறு மற்றும் பேராவூரணி ஆகிய பகுதிகளில் சுமார் 320 ஹெக்டேர் பரப்பில் எண்ணெய் பனை சாகுபடி செய்யப் பட்டுள்ளது. எண்ணெய் பனை சாகுபடி செய்யும் விவசாயி களை ஊக்குவிக்க தோட்டக்கலைத் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் மூலம் கன்றுகள் நடவு செய்தல், 4 ஆண்டுகளுக்கான பராமரிப்பு செலவு மற்றும் ஊடு பயிர் செய்தல், அறுவடை கருவிகள் வாங்குதல் மற்றும் சொட்டு நீர் அமைத்தல் ஆகியவைகளுக்கு அரசு மானியம் வழங்குகிறது. இந்த எண்ணெய் பனை நடவு செய்ததிலிருந்து 4 ஆண்டுக்குப் பிறகு மகசூலைப் பெறலாம். 6 ஆவது ஆண்டிலிருந்து ஹெக்டேருக்கு 20 டன் முதல் 25 டன் வரை மகசூல் பெற்று லாபம் பெறலாம். அறுவடை செய்யப்ப டும் எண்ணெய் பனை குலைகள், டன் ஒன்றுக்கு ரூ.14 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே ஒரத்தநாடு மற்றும் திருவோணம் வட்டார விவசாயி கள் நல்ல லாபம் தரக்கூடிய எண்ணெய் பனை சாகுபடி செய்து பய னடையலாம். எண்ணெய் பனை சாகுபடி செய்ய விரும்பும் விவ சாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தத்தில் நின்று செல்ல நடவடிக்கை தேவை
கரூர், ஜூன் 26 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் க.பரமத்தி ஒன்றியக் குழு கூட்டம், ஒன்றிய குழு உறுப்பினர் எம்.கே.மணி தலைமை யில் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கா.கந்தசாமி மாவட்டக் குழு முடிவுகள் குறித்து பேசினார். ஒன்றியச் செய லாளர் சி.ஆர்.ராஜாமுகமது, ஒன்றியத்தில் நடைபெற உள்ள எதிர்கால பணிகள் குறித்து பேசினார். ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் குமாரசாமி, ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய அரசால் வழங்கப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் கிராமப் புறத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு நூறு நாட்கள் வேலை வழங்கப்படு கிறது. கடந்த ஆறு மாதமாக க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிப் பகுதிகளில் நூறு நாள் வேலை வழங்கவில்லை. இதனால் மக்கள் பொருளாதார நெருக்கடி யால் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே மிகவும் சிரமப் படுகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கரூர் மாவட்ட நிர்வாகமும், க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும் உடனே கிராமப்புற விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு நூறு நாள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் - கோவை நெடுஞ்சாலையில் தென்னிலை அருகில் உள்ள வைரமடை பேருந்து நிறுத்தத்தில், கரூர் - கோவை, கரூர் - திருப்பூர் செல்லும் அனைத்து புறநகர் பேருந்து களையும் பேருந்து நிறுத்தத்தில், நிறுத்திச் செல்வதற்கு சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகளும், கரூர் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பருத்தி மறைமுக ஏலம்
பாபநாசம், ஜூன் 26 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கபிஸ்த லம் அருகே ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. ஏலத்திற்கு விற்பனைக் கூட கண்காணிப்பாளர் த.பிரியமாலினி தலைமை வகித்தார். மேற்பார்வையாளர் பிரசாத் முன்னிலை வகித்தார். இதில் கும்பகோணம், இதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மொத்தம் 1,438 விவசாயிகள், 1,978 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர். ஏலத்தில் கும்பகோணம், செம்பனார்கோவில், பண்ருட்டி, விழுப்புரம், ஆந்திரப் பிரதேசம், மகுடஞ்சா வடி, தேனி, விருதுநகர், கொங்கணாபுரம், தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 15 வணிகர்கள் கலந்து கொண்டனர். பருத்தியின் மதிப்பு 1.36 கோடி ரூபாய். தனியார் வணிகர்கள் அதிகபட்சம் குவிண்டாலுக்கு ரூ.7399, குறைந்தபட்சம் ரூ.6199, சராசரி ரூ.6889 என விலை நிர்ணயித்தனர்.
வீடு தேடி வரும் தபால்காரரிடம் உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்கலாம் ஜூலை 1 முதல் சிறப்பு ஏற்பாடு
தஞ்சாவூர், ஜூன் 26- ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்க தபால்காரர் வீடு தேடி வர சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநில அரசு ஓய்வூதியம் பெறும் குடும்ப ஓய்வூதி யதாரர்கள் ஜூலை 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை, அவர்களது வீட்டு வாசலிலேயே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிப் பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் வகை யில், ஜீவன் பிரதான் திட்டத்தின் மூலம் அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ஓய்வூதியதாரர்களின் வீட்டு வாசலிலேயே, பயோ மெட்ரிக் முகம் சரிபார்ப்பு முறையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள் ளது. இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், மொபைல் எண், PPO எண் மற்றும் ஓய்வூதியக் கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை அல்லது முகம் பதிவு செய்தால் ஒருசில நிமிடங்களில், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். மேலும் இச்சேவையை பெறுவதற்கு https://ccc. cept-gov.in/ covid/request.aspx > service request> IPPBJeevan Pramaan மற்றும் Whatsapp 8904893642 (Business Account) என்ற இணையதள, வாட்ஸ் அப் வழி களை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்க, உங்கள் பகுதி தபால்காரர், உங்களைத் தேடி வந்து உங்கள் தேவையை பூர்த்தி செய்து தருவார்கள். எனவே மாநில அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதிய தாரர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்த படியே தங்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
அரியலூர், ஜூன் 26 - குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை யொட்டி, அரியலூரில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மற்றும் மாவட்ட பாதுகாப்பு அலகு, தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் திங்க ளன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரியலூர் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியர் ஜா. ஆனிமேரி ஸ்வர்ணா, பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார். பேரணியானது, அரியலூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று காமராஜர் திடலில் முடி வடைந்தது. பேரணியில் அரசுப் பள்ளி மாணவ, மாணவி கள் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) சாமி முத்தழகன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயராக வன், வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
கூட்டுறவு வேளாண் கடன் சங்கத்திற்கு நிரந்தர செயலாளரை நியமிக்க கோரிக்கை
திருச்சிராப்பள்ளி, ஜூன் 26 - திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமை யில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியரிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஸ்டாலின் கொடுத்த மனுவில், “திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், நடராஜபுரம் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் செயலாளராக பணியாற்றி யவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இந்த கடன் சங்கம் நடராஜபுரம், அரசங்குடி, கிளியூர் ஊராட்சிகளுக்கு உட்பட்டது. தற்போது மேற்கண்ட கூட்டுறவு வங்கி நிரந்தர செயலாளர் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. வேறு கூட்டுறவு வங்கி செயலாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப் பட்டதால், அவர்களால் முழுமையாக எங்களது கூட்டுறவு பணியினைச் செய்ய முடியவில்லை. மேலும் முறையாக வருவது இல்லை. அதனால் இச்சங்கத்திற்கான உறுப்பினர்கள், பொது மக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள், விவசாயிகளது வரவு-செலவு செய்ய முடியா மல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மேற்படி கூட்டுறவு சங்கத்திற்கு நிரந்தரமாக செயலாளரை நியமிக்க வேண்டும்” என கூறியிருந்தார். ஆட்சியரிடம் மனுவை கொடுத்த போது, தமிழ்நாடு விவசாயிகள் சங்க புறநகர் மாவட்டச் செயலாளர் நடரா ஜன், வாலிபர் சங்க மாவட்ட துணைத்தலைவர் தமிழ்ச்செல் வன், விவசாயி தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
குறுவை பருவ பயிருக்கு காப்பீடு செய்ய ஜூலை 31 கடைசி
தஞ்சாவூர், ஜூன் 26- புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் நிகழாண்டு காரீப் (குறுவை) பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்ய ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “தஞ்சாவூரில் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்காக தஞ்சாவூர் 1-க்கு ஷீமா பொது காப்பீடு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் 1-இல் தஞ்சாவூர் (பூதலூர் மற்றும் கண்டியூர் பிர்கா தவிர), ஒரத்தநாடு, திருவோணம் பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம், அம்மாபேட்டை (அய்யம்பேட்டை மற்றும் பாபநாசம் பிர்கா தவிர) ஆகிய வட்டாரங்கள் அடங்கும். தஞ்சாவூர் 2-க்கு அக்ரி கல்சுரல் இன்குரன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் 2-இல் தஞ்சாவூர் வட்டாரத்தில் பூதலூர் பிர்காவில் உள்ள சித்திரக்குடி கூடுதல், சித்திரக்குடி முதன்மை, மருதாக்குடி, ராயந்தூர் கிராமங்கள், கண்டியூர் பிர்காவில் உள்ள அரசூர், சின்ன அவுசாகிப் தோட்டம், கலியபானு ராஜா தோட்டம் மணக்கரம்பை, நாகத்தின், ராஜேந்திரம், செங்கழுநீர் தோட்டம், தென்பெரம்பூர் ஆகிய கிராமங்களும், அம்மாபேட்டை வட்டாரத்தில் அய்யம்பேட்டை பிர்காவில் உள்ள அகரமாங்குடி, பெருமாக்கநல்லூர், பொரக்குடி. செருமாக்கநல்லூர், கரைக்காயூர், வடக்கு மாங்குடி, வையச்சேரி, வேம்புக்குடி ஆகிய கிராமங்களும், பாபநாசம் பிர்காவில் உள்ள தேவராயன்பேட்டை, மேல செம்மங்குடி, பொன்மான் மேய்ந்த நல்லூர், புலிமங்கலம், திருவையாத்துக்குடி ஆகிய கிராமங்களும் பூதலூர், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் ஆகிய வட்டாரங்களும் அடங்கும். நிகழாண்டு காரீப் (குறுவை) சிறப்பு பருவத்தில் நெல் பயிருக்கு, தஞ்சாவூர் மாவட்டத்தில் 775 வருவாய் கிராமங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. பயிர் காப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு ரூ.36,500, விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமிய தொகை ரூ.730, காப்பீடு செய்ய கடைசி தேதி ஜூலை 31 ஆம் தேதி என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ அல்லது பொது சேவை மையங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் சான்று (பசலி 1434), வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க ஒளி நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீடு செய்யலாம்” என்றார்.