திருவாரூர், டிச. 3 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் “புத்தக வங்கி”யினை மாவட்ட ஆட்சி யர் ப.காயத்ரிகிருஷ்ணன் துவக்கி வைத்தார். புத்தக வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் வகை யில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தக வங்கியில் பொது மக்கள், அரசு அலுவலர்கள் இங்குள்ள புத்தகங் களை தங்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்று படித்து விட்டு மீண்டும் புத்தக வங்கியில் வைக்கலாம். மேலும் தங்களிடமுள்ள புத்தகங்களை கொடையாக வழங்க விரும்பினால் இப்புத்தக வங்கியில் வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணிய கோட்டி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வகுமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.