districts

img

தமிழக ஆளுநரின் வருகையை கண்டித்து நாகை, திருவாரூரில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்/திருவாரூர், டிச.23 - நாகப்பட்டினம் மாவட்டத் திற்கு வருகை தந்த தமிழக ஆளு நரை கண்டித்து சிபிஎம் தலைமை யில் கூட்டணி கட்சிகள் ஒருங்கி ணைந்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.  நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் கந்தூரி ஆண்டு திரு விழாவை முன்னிட்டு நாகூர் தர்கா விற்கு வந்த, தமிழ்நாட்டு மக்கள் நலனின் சிறிதளவும் அக்கறை கொள்ளாத, ஆர்எஸ்எஸ், பாஜக முகவராக செயல்படும் தமிழ்நாடு  ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து கீழ்வேளூர் ரவுண்டானா வில் கருப்புக் கொடி ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.  சிபிஎம் நாகை மாவட்டச் செய லாளர் வி.மாரிமுத்து தலைமை யில், கூட்டணி கட்சித் தலைவர் கள் இந்த கருப்புக்கொடி ஆர்ப்பாட் டத்தில் கலந்து கொண்டனர். கீழ்வேளூர் புறவழிச் சாலை  ரவுண்டானாவில் கூடியிருந்த சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி. மாரிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சுப்பிரமணியன், சிபிஎம் கீழ்வேளூர் வடக்கு ஒன்றி யச் செயலாளர் என்.எம். அபு பக்கர், காங்கிரஸ் கட்சி மாவட்டத்  தலைவர் ஆர்.என்.அமிர்தராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  மாவட்டச் செயலாளர் நாக.அருள் செல்வன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள், ஆளுந ரின் வருகைக்கு கருப்புக் கொடி  காட்டும் போது, காவல்துறை யினர் அனைவரையும் கைது செய்தனர். திருவாரூர் தமிழ்நாடு அரசுக்கு எதிராக வும், மக்கள் விரோத நடவடிக்கை யில் தொடர்ந்து ஈடுபட்டும் வரும்  ஆளுநர் ஆர்.என்.ரவி சனிக் கிழமை சாலை மார்க்கமாக நாகூ ரில் இருந்து திருவாரூருக்கு வந்தார். அப்போது ஆளுநரின் ஜன நாயக விரோத செயலுக்கு கண்ட னம் தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் திருவாரூர் மாவட்டத்தில் 3 இடங்களில் கருப்புக்  கொடி காட்ட முயற்சித்தனர். இத னால் நூற்றுக்கும் மேற்பட்ட வர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், கொர டாச்சேரி வெட்டாற்று பாலம் அருகே சிபிஎம் மாவட்டச் செய லாளர்  ஜி.சுந்தரமூர்த்தி தலைமை யில் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயன்றனர். இதில் தமிழ்நாடு விவசாய சங்க  மாவட்டத் தலைவர் எஸ்.தம்பு சாமி, சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் டி.ஜெயபால், மாவட்ட குழு உறுப்பினர் கே.சீனிவாசன், வாலி பர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் எம்.எஸ்.ஜெய்கிஷ் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் வாழவாய்கால் ரவுண்டானா அருகே சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் தலைமையில் கருப்புக் கொடி காட்ட முயன்ற மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ஜி. ரகுராமன், பி.கோமதி, சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே.என். அனிபா மற்றும் சிபிஎம் ஒன்றியச்  செயலாளர் என்.இடும்பையன், நகரச் செயலாளர் எம்.தர்ம லிங்கம் உள்ளிட்டோர் கைது செய் யப்பட்டனர். நீடாமங்கலம் கடைவீதியில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப் பினர் பி.கந்தசாமி தலைமையில் கருப்பு கொடி காட்ட முயன்ற நீடா மங்கலம் சிபிஎம் ஒன்றியச் செய லாளர் டி.ஜான்கென்னடி, மாவட்டக்  குழு உறுப்பினர் ஆர்.சுமதி  மற்றும் ஒன்றிய குழு உறுப்பி னர்கள் கைது செய்யப்பட்டனர். முன்னதாக இந்திய மாண வர் சங்கத்தின் மாவட்ட துணைத்  தலைவர் வீ.சந்தோஷ் தலைமை யில் திருவிக கலைக் கல்லூரி  அருகே கருப்பு கொடி காட்ட  திட்டமிட்டதை அறிந்து, முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினர் மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ப.சுர்ஜித் உள்ளிட்ட மாணவர்களை கைது செய்தனர்.