districts

பாரதிதாசன் பல்கலை ஓய்வூதியர் புதிய இணைய முகப்பு தொடக்கம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 8-

    பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் புதனன்று நடை பெற்ற நிகழ்ச்சியில் பல்கலைக்கழக ஓய்வூதியர்களுக் கான புதிய இணைய முகப்பை துணைவேந்தர் செல்வம்  புதனன்று தொடங்கி வைத்தார்.

     இந்தத் தளம், பல்கலைக்கழக நிதிப் பிரிவால்,  பல்கலைக்கழக ஓய்வூதியதாரர்களுக்கு, அவர்களின்  மாதாந்திர ஓய்வூதிய விவரங்கள் குறித்து இணைய வழியாக அறிந்துகொள்ளவும் மற்றும் ஓய்வூதியம்  தொடர்பான தகவல்களை இணைய வழியாக பதி வேற்றவும் உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இணைய முகப்பில் ஓய்வூதியர்களுக்குத் தேவை யான அரசாணைகள், சுற்றறிக்கைகள், பல்கலைக்கழ கத்தின் அறிவிப்புகள் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான படி வங்கள் சேர்க்கப்பட உள்ளன. ஓய்வூதியம் பெறுவோர் அவர்களது ஓய்வூதியத்தை அறிந்து கொள்ளவும், வரு மான வரியை கணக்கிடவும் இந்த தளம் வழிவகை செய்கி றது. (https://oms.bdu.ac.in/pensioners)eservices என்கிற இணைப்பின் மூலம் இந்த இணைய முகப்பை  அணுக முடியும். இந்த தளம் குறித்த பிற தகவல்களுக்கு  பல்கலைக்கழக நிதிப் பிரிவை fo@bdu.ac.in (mailto: fo@bdu.ac.in) என்கிற மின்னஞ்சல் முகவரி மூலம்  தொடர்பு கொள்ளலாம் என பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.